டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார்.
பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 6 போரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவன் வீட்டில், மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியதில் வீடு தீபிடித்து எரிந்தது.
டெல்லி மாணவியை மேற் சொன்னபடி 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததில், மாணவி உயிருக்குப் போராடி, கடந்த சனிக்கிழமை சிங்கப்பூர் மருத்துவமனைய்ல் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 6 பேர் வீடுகளுக்கும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஒரு குற்றவாளி, பீகாரில் உள்ள ஒரு விவசாயக் குடுமபத்தை சேர்ந்தவன் என்றும், அந்த வீட்டினுள் இருக்கும் குற்றவாளியின் பெற்றோர் எப்போதும் வெளியில் வராமல் வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்கின்றனர் என்றும், அவ்வப்போது அழுகுரல் கேட்கிறது என்றும் அங்கு காவலுக்கு இருக்கும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் முக்கியக் குற்றவாளி ஒருவன் வீட்டில், மர்ம நபர்கள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காவலுக்கு இருந்த போலீசார் என்ன ஆனார்கள் எப்படி இந்த குண்டு வீச்சு தாக்குதல் நடந்தது என்றெல்லாம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நேரத்தில் டெல்லி மாணவி பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை வரும் வியாழக் கிழமை, நீதி மன்றத்தில் தாக்கலாக உள்ளது என்றும், சாட்சிகளாக 30 பேர் சேர்க்க பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

0 Responses to டெல்லி மாணவி பாலியல் வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளியின் வீட்டில் வெடிகுண்டு வீச்சு?