நாஞ்சில் சம்பத் மீதான 3
அவதூறு வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. சென்னை செசன்ஸ்
கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை திரும்ப பெற்றுக் கொள்ள
அனுமதிக் கேட்டு மாநகர அரசு வக்கீல் எம்எல் ஜெகன் 02.01.2013ல் மனுதாக்கல்
செய்துள்ளார்.
2001
2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தின்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
பொடா சட்டத்தின் கீழ் 2002ம் ஆண்டுல் கைது செய்யப்பட்டார். இவரது கைதை
கண்டித்து அக்கட்சியில் இருந்த நாஞ்சில் சம்பத் காரசாரமாக பேசினார்.
கடந்த
201.01.2003 மற்றும் 21.01.2003 ஆகிய தேதிகளில் சென்னை தம்பு செட்டி தெரு
வேப்பேரி தானாùருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ கைதை கண்டித்து
நாஞ்சில் சம்பத் பேசினார். இதேபோன்று 17.4.2004 அன்று வில்-வாக்கத்தில்
நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து நாஞ்சில்
சம்பத் பேசினார்.
இதுதொடர்பாக
நாஞ்சில் சம்பத் மீது தமிழக அரசு 3 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்தது.
சென்னையில் உள்ள 4வது மற்றும் 7வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் இந்த
வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன.
இந்த
நிலையில் இந்த 3 வழக்குகளையும் வாபஸ் பெறுவது தொடர்பாக தமிழக அரசின்
பொதுத்துறை செயலாளர் சார்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி அரசாணை
வெளியிடப்பட்டது. இந்த அரசாணைகளின் அடிப்படையில் சென்னை மாநகர அரசு வக்கீல்
எம்எல் ஜெகன், நாஞ்சில் சம்பத் மீதான 3 அவதூறு வழக்குகளையும் வாபஸ்
பெற்றுக்கொள்ள அனுமதிக்க கேட்டு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 321ன்
கீழ் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மூன்று மனுக்களும் முறையே 4வது மற்றும் 7வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் 02.01.2013ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
0 Responses to வைகோ கைதை கண்டித்து ஜெ.வை விமர்சித்து நாஞ்சில் சம்பத் பேச்சு! அவதூறு வழக்கை வாபஸ் பெற்றது தமிழக அரசு!