முள்ளிவாய்க்காலில்
எல்லாவற்றையும் முடித்துவிட்டோம், தமிழர்களுக்கு விடுதலை இல்லை, அவர்கள்
சிறிலங்காவில் முடிந்த, மடிந்த இனம் என்று சிறிலங்கா நினைத்து நிற்க, புலம்
பெயர் நாடுகளில் எழுத்து வலுவுடன் தமிழீழ மக்கள் கொடுத்த ஆணையை அந்த
மக்களின் ஜனநாயக நோக்கத்தை எடுத்து செல்ல அனைத்து நாடுகளிலும் மக்கள்
ஆணையுடன் உருவானது மக்கள் பேரவைகள். அந்த வழியில் முள்ளிவாய்கால்
அழிவுகளுக்கு இடையே போர் அமைதியானபோது போராட்டத்தின் தொடர்ச்சியாக உருவானது
பிரான்சில், பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை.
.ஒரு மனிதனின் தியாகத்திலும், சாவிலும் அர்த்தங்கள் இருக்கவேண்டும், இதை தான் காலம் காலமாக தமிழ் மக்களுக்காக போராடியவர்கள் அவர்கள் தியாகங்கள் மூலம் விடுதலைக்கு வித்திட்டு விட்டு செண்டிருக்கிரார்கள். தமிழர் போராட்டத்தை நாம் பல தொடர்களாக பார்க்கலாம், அந்நியர்களை எதிர்த்து போராடிய தமிழ் அரசர்கள், பின்பு தந்தை செல்வா போன்ற அரசியல்வாதிகள் 76கலீல் தமிழீழம் தான் தமிழர்களுக்கு தீர்வு என்று அதற்குரிய மக்கள் ஆணையை பெற்று தந்துவிட்டு சென்றார்கள், அதன் அடுத்த கட்டமாக அந்த மக்கள் ஆணையை தமிழ் இளையோர்கள் எடுத்து அதையே தமது வாழ்க்கையாக்கி வாழ்ந்து காட்டினார்கள். தமிழர் பிரச்சனை அந்த காலப்பகுதியில் ஆசிய பிராந்தியத்தில் மட்டும் பேசப்பட்டு வந்தது, இன்று, 1983க்கு பின் சர்வதேச அளவில் பேசும் நிலைக்கு கொண்டுவந்து விட்டு , மனிதவுரிமைக்கான போராட்டத்தை 2002யில் சர்வதேச முன் கொண்டுவந்து நிறுத்தி 2003யில் தமிழீழ விடுதலை புலிகளால் வைக்கப்பட்ட இடைகால அரச தீர்வு சர்வதேச அளவில் பேசப்பட்டு, தமிழீழத்தின் அங்கீகாரம் என்று சொல்லும் அளவிற்கு தமிழீழ விடுதலை புலிகள், தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக சமாதான பேச்சு வார்த்தைகளிலும், பல நாட்டு அரச பிரதிநிதிகளின் சந்திப்புகளிலும் அதன் மூலம் நடந்த சந்திப்புகள் மூலம் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று கொடுத்தனர்.
முள்ளிவாய்காலில் நடந்த போராட்டம் ஐக்கியநாடுகள் சபையை இந்த போராட்டதிட்குள் இணைத்தது, சர்வதேச வல்லரசுகள் தமிழர் சிங்களவர் பிரச்சனையை பேச வைத்தது. இது தமிழர் விடுதலை போராட்டத்தில் முக்கிய கால கட்டம், தமிழீழ உறவுகள் அந்த மண்ணில் செய்த தியாகம் தான் இன்று 2009க்கு பின் அடுத்த கட்டமாக புலம் பெயர் மக்களின் கையில் போராட்டத்தை ஒப்படைத்து விட்டு சென்று இருக்கிறது. அதன் தொடர்ச்சியே நாம் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையும், உலகத்தில் 11 நாடுகளில் உருவான மக்கள் பேரவைகளும் தமிழரின் ஜனநாயக உரிமை போராட்டத்தை தாம் வாழும் நாடுகளில் மக்கள் முன்னிலையிலும், மனித நேய அமைப்புகள், வாதிகள், அரசியல் கட்சிகள், ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் முன் எடுத்து சென்றனர். அதில் எமக்கு பல சவால்கள் முன் நின்றது, 27 ஐரோப்பிய நாடுகளின் தலைமை செயலகமாக இயங்கும் ஐரோப்பிய யூனியன், தமிழ் ஈழம் என்பது மக்கள் ஆணையா அல்லது ஒரு குறிப்பிட்ட குழுக்களின் ஆணையா என்று சந்தேகத்தை எழுப்பியதோடு இதை தமிழர்களுக்கு ஒரு சவாலாக விட்டனர். சிறி லங்காவில் வாழும் மக்கள் இந்த கேள்விக்கு விடை கொடுக்க முடியாத நிலையில், தமிழ் மக்கள் தொகையில் முன்றில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து வாழும் காரணத்தால் இதன் முலம் புலம்பெயர் மக்கள் தமக்கிடையே சர்வதேச அளவில் இந்த வினாவுக்கு பதில் கூறுவார்கள் என்ற சவாலை ஏற்று பிரான்சில் டிசம்பர் மாதம் 2009, தமிழ் ஈழம் இன்றும் மக்களின் ஆணையா ? என்ற கேள்வியுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரான்சில் வாழும் தமிழ் மக்கள் பெரும் அளவில் பங்கு பற்றி, மக்கள் ஆணையை மீள் வலியுறுத்தினர். இந்த வாக்கெடுப்பு பல சவால்களுக்கு மத்தியில், சில தமிழ் தொலைகாட்சி ஊடகங்கள் எதிர் விவாதங்கள் வைக்க, பிரான்சு நாட்டில் மக்கள் ஆணையை வலியுறுத்தி காட்டினார்கள். அதை தொடர்ந்து உலகெங்கும் இந்த கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஐரோப்பிய யூனியனுக்கும் மற்றைய சர்வதேச வல்லரசுகளுக்கும் தமிழர்களின் விருப்பை வலியுறுத்தி கட்டப்பட்டது. இது புலம் பெயர் மக்கள் செய்த மிகப் பாரிய போராட்டம். இதன் பின் சர்வதேச அளவிலும் ஒரு பாரிய மாற்றத்தை உருவாக்க வழி செய்தது.
பிரான்சு நாட்டில் உள்நாட்டு மனித நேய அமைப்புகள், மாநகர சபை நகர பிதாக்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று பாரிய ஒரு தமிழர் பாதுகாப்பு வட்டத்தை உருவாக்கும் பணியை நாம் எடுத்திருந்தோம். அதே நேரத்தில் 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய கவுன்சிலையும், 27 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய யூனியனிலும் எமது செயல்பாடுகளை நகர்த்தும் பாரிய பணியும் எமக்கு இருத்தது. பிரான்சில் எமது அரசியல் செயல்பாடுகளில் பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் மிக முக்கியமாக இருந்தது. அந்த அடிப்படையில் எமது உறுப்பினர்கள் பல கட்சிகளுக்குள்ளும் செயல்பட ஆரம்பித்தார்கள், அதன் மூலம் சில செயல்பாடுகளை செய்யக்கூடியதாக இருந்தது. வலது சாரி கட்சிகள், சோஷலிச கட்சிகள், இடது சாரி கட்சிகளின் ஆதரவும் எமக்கும் கிடைத்தது. அந்த இடத்தில் பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னால் அமைச்சர் திருமதி ஆயசநை புநழசபந டீரககநவ அவர்களும் தமிழர் போராட்டத்தில் தமது முழு ஆதரவையும் அளித்ததோடு மட்டுமல்லாமல் தமிழீழ உருவாக்கத்தையும், தமிழர்களுக்கு எதிராக நடந்ததும் நடப்பதும் ஒரு இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டனர். அத்துடன் பசுமை கட்சியின் ஊடாக எமக்கு ஆதரவு குரல்கள் கிடைத்தது. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பல கட்டங்களில் அவர்கள் குரல் எதிரொலித்தது. செவ்ரான் நகர நகரபிதா ஆழளெ ளுவநிhநn புயவபைழெn, தமிழீழ மக்களின் குரலாக 2009யில் இருந்து பல வழிகளில் தனது கரங்களை தந்து கொண்டிருக்கின்றார். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறி லங்கா நாட்டில் நடைபெற்றது போர்குற்றம் அற்ற அடிப்படையில் நடைபெற்ற மகாநாடு ஆகட்டும்,ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒளிபரப்பப்பட்ட சேனல் 4 நிறுவனம் வெளியிட்ட சிறி லங்காவின் கொலைகளங்கள், பிரெஞ்சு பாராளுமன்றத்தில் ஒளிபரப்பட்ட சிறி லங்காவின் கொலை களங்கள் காணொளி ஆகட்டும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் நடைபெற்ற மனிதவுரிமை கொன்சில் மகாநாடு ஆகட்டும், பல முனைகளிலும் எமது செயல்பாடுகள் இருந்தது.
அத்துடன் பிரான்சு நாட்டில் 80க்கு மேற்பட்ட மனித நேய அமைப்புகளின் ஆதரவு, பல அறிஜர்களின் ஆதரவும் இன்று ஈழதமிழர்களுக்கு இருக்கிறது. அத்துடன் இன்று பிரான்சு பாராளுமன்றத்தில் ஈழத் தமிழர்களின் மனிதவுரிமை பிரச்சனை மட்டுமல்லாமல், வாழ்வுரிமையையும் ஆய்வு செய்ய பாராளமன்ற குழுவொன்று உருவாகி இருக்கிறது. பிரான்சை பொறுத்த வரையில் இது ஒரு மயில் கல்லாகத் தான் நாம் பார்க்கிறோம். நாம் கடக்க வேண்டிய தளங்களும், பாதைகளும் நீண்டது. அதன் நோக்கமாக சர்வதேச அமைப்புகளுடன் எமது உறவுகளை வலுத்துக்கோலும் செயல்பாடுகளிலும் நாம் ஈடுபட்டுளோம். பல நாடுகளில் பல சந்திப்புகள், பல்லின மக்களுடன் உறவாடால்கள் என்று ஒரு சர்வதேச கட்டமைப்பை உருவாக்கும் செயலில் நாம் செயல்பட்டுள்ளோம். பிரித்தானிய, அயர்லாந்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற பல மகாநாடுகளில் நாம் பங்குபற்றினோம், அதே போல கனடா, இத்தாலி, ஐயர்லாந்து டப்ளின் நகரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம், பிரான்சில் ச்ற்றச்பௌர்க் நகரில் நடைபெற்ற மகாநாடுகள், முதலாவது உலக ஜனநாயகம் பற்றிய மகாநாடு ஆகிய கூட்டங்கள் சர்வதேச முன் எமது செயல்பாடுகளை கொண்டு செல்ல நடந்த வேலைத்திட்டங்கள். அதற்கு மேலாக எமது செயல்பாடுகளை சர்வதேச நாடுகள் வாரிகளாக இட்டு செல்லும் செயல் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது விசாரணை குழுவின் தீர்வுக்கு பின் ஒன்றமைந்த செயல்பாடு மிக முக்கியமாக காணப்பட்ட அடிப்படையில், கனடா, நோர்வே, டென்மார்க், ஹோல்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, நியூ சிலாந்து ஆகிய மக்கள் பேரவைகள் ஒன்று சேர்ந்து அனைத்துல தமிழீழ மக்கள் அவை (ஐஊநுவு) என்ற ஒருங்கிணைத்த கூட்டமைப்பை உருவாக்கி, பிருத்தானிய, ஆஸ்திரேலியா, மலேசியா, மொரிசியஸ், ரியுனியன் தீவு, இந்திய போன்ற நாடுகளில் உள்ள அமைப்புகளுடன் எமது செயல்பாடுகளை வளர்த்துக்கொண்டு இருக்கிறோம்.
இந்த காலத்தில் எமது போராட்டத்திற்கு வலு கொடுக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது அறிக்கையும் வெளியானது. இந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை தமது செயல்பாடுகளில் தவறுகள் நடந்ததை ஏற்றுக்கொள்வதோடு, அது ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்று கூறி நிற்கிறது. இன்று எமக்கும் எல்லோருக்கும் சர்வதேசம் தமது குற்ற பத்திரிகையை அளித்திருக்கும் நேரத்தில் எமது செயல்பாடுகள் வேக்கப்படுதப்பட வேண்டும். அதை தெரிந்தோ என்னவோ தமிழ்நாட்டில் 'தமிழீழ அங்கீகாரத்தை கேட்டு ஒருகோடி கையெழுத்து போராட்டம் ஆரம்பமாகி அது கனடா மக்கள் அவை தொடர பிரான்சில் தமிழீழம் மக்கள் பேரவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது போராட்டம் சர்வதேச அளவில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி படுத்தும் போராட்டமாக மாறி வருகிறது, சர்வதேச அளவில் தமிழர்கள் தாம் பாதுகாப்பு இன்றி அடையாளம் இன்றி அழிந்து போய்விடுவோமோ என்ற பயம் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை முதன்மை போராட்டமாக எடுத்துகொண்டிருக்கிரார்கள். இந்த போராட்டத்தின் அடுத்த கட்ட முக்கிய நிகழ்வாக மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறப்போகும் மனிதவுரிமை அமைப்பின் அமர்வு. மார்ச் மாதம் நடக்க இருக்கும் மனிதவுரிமை சபையின் அமர்வு, ஈழத்தமிழர்களுக்கு மிக முக்கியமானது. அந்த அடிப்படையில் எமது செயல்பாடுகளும் அதை நோக்கியே அமைகிறது.சர்வஜன வாக்கெடுப்பு, ஜெனீவா நோக்கியும் அதனைத் தாண்டியும். எதிர்வரும் பெப்ரவரி மார்ச் 2013ல் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையில் மனிதவுரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. நீதி வேண்டி நிற்கும் ஈழத்தமிழருக்கு இம்முறை ஐ.நா களம் அமைத்துக் கொடுத்திருக்கும் முக்கிய காலமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் போர்க்குற்ற விசாரணையையும் தாண்டித் தமிழர்களுடைய வேண்டுகோளென்பது நிரந்தர அரசியல் தீர்வை நோக்கியதாக அமைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை தம்மைத் தாமே ஆராயுமுகமாக வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் 'இலங்கையில் நடந்த போரில் தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்' என்பதையும் 'அதனால் எண்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்' எனவும் ஐ.நா தெரிவித்திருக்கும் இவ்வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கமைய ஈழத்தமிழ் மக்கள் சுயமாகத் தமது அரசியல் வேணவாவைத் தெரிவிக்குமுகமாக ஒரு பொதுசன வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அளிக்க வேண்டுமென்று இனப்படுகொலையை வலியுறுத்த வேண்டுமென்று, ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு அமைய தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை வலியுறுத்த வேண்டுமென்று ஜெனீவாவில் முக்கிய பன்னாட்டு மாற்றினப் பிரமுகர்கள், சட்ட வல்லுனர்கள், தமிழ் பிரமுகர்களின் கருத்துக்களுடன் சர்வஜன வாக்கெடுப்பை மையமாக வைத்து மாபெரும் தமிழர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் பங்குபற்றும் அனைத்துப் பிரமுகர்களும் ஈழத்தமிழ் மக்களுக்கான சர்வஜன வாக்கெடுப்பின் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைப்பார்கள். அதற்கு மேலாக தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், அவர்களின் பாதுகாப்பு சர்வதேச சட்டங்களுக்கு கீழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பாரிய மகாநாடாக இது ஒழுங்கு செயப்படுகிறது 2013 மார்ச் 1ம் 2ம் 3ம் நாட்களில் ஜெனீவாவில் நடைபெறும் மாநாடானது தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பிற்குக் குரல் கொடுக்கும் முக்கிய பன்னாட்டுப் பிரமுகர்களை ஒருங்கிணைப்பதோடு ஐ.நா பொதுச்சபையில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வஜன வாக்கெடுப்பைக் கொண்டுவருவதற்கான நோக்கத்தைக் கொண்டதாகவும் அமையும். நாம் அனைத்துலக மக்களவையுடன் இணைந்து செயற்படுத்தும் இப்பாரிய வேலைத்திட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்துகொண்டு செயற்படவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
இம்மாநாடு பற்றிய மேலதிக விபரங்கள் தேவைப்படின் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையுடன் தொடர்பு கொள்ளலாம். 2009யில் முள்ளிவாய்காலில் ஒன்றும் முடிந்து விட வில்லை, சர்வதேசம் முன் இன்று வந்து நிற்கிறோம். இதில் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் பங்களிப்பு மிகவும் பெரியது. இழப்புகளுக்கு நடுவே என்றும் நாம் வீழ மாட்டோம் என்று உறுதியுடன் நீங்கள் எல்லோரும் நின்ற படியால்தான் இன்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட இரண்டாவது அறிக்கையும், அதை நாம் பயன்படுத்தப்போகும் வழிகளும். இந்த பாரிய செயால்பாட்டிட்கு தமிழீழ மக்களின் பக்க பலமும் எமக்கு தேவை, உங்களின் தியாகங்களும் அர்பணிப்புத்தான் நாம் இன்று சர்வதேசம் முன் எழுந்து நிற்கிறோம்.இந்த போராட்டத்தை நாம் உங்களுடன் சேர்ந்து முன் செல்வோம்.மார்ச் அமர்வு, அப்போது நடைபெற இருக்கும் மகாநாடு எமது அடுத்த மயில் கல், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கற்களும் தமிழீழத்தை கட்டியெழுப்பும்.
2013 புது வருடம் தமிழர்களை விடுதலை பாதைக்கு எடுத்து செல்ல செயல்படுவோம்!
- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

0 Responses to 2013 புது வருடம் தமிழர்களை விடுதலை பாதைக்கு எடுத்து செல்ல செயல்படுவோம்: தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு