Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட, தே.மு.தி.க., சார்பில் பொங்கல் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நாஞ்சிக்கோட்டை ரோட்டில் நேற்றிரவு நடந்தது.

டெல்டா மாவட்டத்தில் வறட்சி பாதிப்பால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பொருட்கள் அடங்கிய பையை வழங்கி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியபோது, 

‘’தஞ்சை மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்க தே.மு.தி.க., பொதுக்கூட்டம், 11ம் தேதி நடக்கும் என, அறிவித்தவுடன், தஞ்சை உட்பட டெல்டா மாவட்டங்களில், எட்டு அமைச்சர்களை கொண்ட குழுவினர் நிதியமைச்சர், பன்னீர்செல்வம் தலைமையில் முகாமிட்டு, ஆய்வு நடத்துகின்றனர்
.

அ.தி.மு.க.,வுடன் ஒரு முறை தான் கூட்டணி வைத்தேன். அதுவும் தொண்டர்கள் கூறியதற்காக வைத்தேன். பாடம் கற்றுக்கொண்டதால் பாதியில் விலகி விட்டோம்.

வரும் லோக்சபா தேர்தலில், யாருடனும் கூட்டணி இல்லை என்பதை இந்த கூட்டத்தில் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். இதில், தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். காவிரி நீரை பெற்றுத்தராமல் முதல்வர் ஜெயலலிதா கபட நாடகம் ஆடுகிறார். இதை மக்கள் நம்ப வேண்டாம்.

என்மேல் வழக்குக்கு மேல் வழக்குகளை ஆளுங்கட்சி போடுகிறது. இதை கண்டு பயப்பட மாட்டேன். ஏனென்றால் நான் கூட்டத்தில் பேசுவதெல்லாம், என் சொந்த கருத்து அல்ல; அது, அ.தி.மு.க.,வினரே பேசி வரும் கருத்து. அதைத் தான் நான் கூட்டத்தில் பேசுகிறேன்.

டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்காக, 12 மணி நேரம் மும்முனை மின்சாரத்தை, ஜெயலலிதா அரசால் வழங்க முடியவில்லை.தமிழகத்தில் மழை பெய்யாததற்கு கூட ஆள்பவர்கள் கெட்டவர்களாக இருப்பது தான் காரணம்’’என்று தெரிவித்தார்.

0 Responses to யாருடனும் கூட்டணி இல்லை;உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்: விஜயகாந்த்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com