Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அல்கொய்தாவின் அட்டூழியம் அதிகரித்து விட்டதால், மாலி நாட்டுக்கு உதவி புரியும்படி கனடாவை ஆப்ரிக்க ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது.

கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரை ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவர் தாமஸ் போனி யாயி இந்த வாரம் ஒட்டாவாவில் சந்திக்க உள்ளார்.

அப்போது மாலிப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் வடக்கு ஆப்ரிக்காவின் உள்ள பெனின் நாட்டின் ஜனாதிபதியும் ஆவார்.

இந்நிலையில் கனடிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஆப்ரிக்க படைகளுக்கு, தங்கள் நாட்டு இராணுவம் பயிற்சி அளிக்க தயார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதன்படி கனடாவிலிருந்து பல்வேறு உதவிகளை பெற்று வந்த ஆப்ரிக்க நாடுகள், தற்போது இராணுவ உதவியும் கோரியுள்ளது.

இதுகுறித்து ஹார்ப்பர், பெனின் நாட்டின் மேம்பாட்டுக்காக வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்த கனடா ஆர்வமாக உள்ளது என்றும், தாமஸ் போனியை சந்திக்க ஆவலோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

0 Responses to அல்கொய்தாவின் அட்டூழியம் அதிகரிப்பு: கனடாவிடம் உதவி கேட்ட ஆப்ரிக்க ஒன்றியம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com