Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் சிவகாமி சிவசுப்பிரமணியம் என்ற தமிழினி இன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு 43வயதாகும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த வாரம் கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று அவர் மரணமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போரின் பின்னர் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட தமிழினி பின்னர் குடும்பத்துடன் இணைக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விடயம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நோயின் கடும் தாக்கம் காரணமாக அண்மையில் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவரிடம் அடையாள அட்டை எதுவும் இல்லாத காரணத்தினால், அவரின் கணவரான ஜெயக்குமாரின் கடவுச்சீட்டைக் கொண்டே அனுமதி பெறப்பட்டது.

இதன் அடிப்படையில் வைத்தியசாலை பதிவில் சிவகாமி ஜெயக்குமார் என்று பதியப்பட்டுள்ளது.

தமிழினி 1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.

0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழினி காலமானார்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com