தமிழ்
ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஈரோடு மாணவர்கள் இன்று (28.03.2013)
பொதுமக்களிடம், மத்திய அரசின் மவுனத்தை கலைக்க வேண்டும் என கையெழுத்து
இயக்கம் நடத்தினார்கள். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்
கூடாது. தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை இனியும் காப்பாற்ற இந்தியா
முயற்சி செய்யக் கூடாது. கடந்த 20 நாட்களாக மாணவர்கள் போராட்டம் தமிழ்நாடு
முழுக்க நடந்து வரும் நிலையில், மத்திய அரசு இதுவரை மாணவர்கள் போராட்டம்
குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. நாங்களும் இந்தியாவில் இருக்கிறோம்
என்பதை உணருங்கள். இதனை வ-யுறுத்தி இந்த கையெழுத்து இயக்கத்தை மாணவர்கள்
நடத்தினார்கள்.
இதன்
தொடர்ச்சியாக அடுத்த மாதம் மாணவர்கள் டெல்லிசென்று பிரதமர் மன்மோகன் சிங்
அலுவலத்தை முற்றுகையிட்டு மனு கொடுப்பதாக முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சட்டக் கல்லூரி மாணவர் சுபாஷ் நக்கீரன் இணையதளத்திடம் கூறியதாவது,
ராஜபக்சே
தமிழர்களை துச்சமாக மதிக்கிறார் என்றால், இந்திய அரசும் ராஜபக்சே நிலையையே
கையாண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள தமிழர்களை இனப்பாகுபாடோடு இந்திய
அரசு நடத்துகிறது. ராஜபக்சே போல இந்த காங்கிரஸ் அரசும், தமிழ் ஈழத்திற்கு
எதிரான இனவெறி அரசாக மாறியுள்ளது. மற்ற மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம்
நடைபெறும்போது, அந்த மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு,
தமிழ்நாட்டு மாணவர்கள் போராட்டத்தை மட்டும் ஏதோ ஆஸ்திரே-யாவில்
நடப்பதைப்போல கண்டும் காணாமல் உள்ளது. தற்போது மாணவர்களுக்கான தேர்வு
நெருங்கி வருகிறது. இந்த நிலையில் மாணவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக
திட்டமிட வேண்டியிருக்கிறது. மத்திய அரசு இனியும் மவுனம் சாதித்தால், தமிழக
மாணவர்களின் வீரம்மிகுந்த போராட்டங்களை இந்திய அரசுக்கு எதிராக
அடுத்தடுத்து நடத்த இருக்கிறோம் என்றார்.
செய்தி, படங்கள்: ஜீவா தங்கவேல்.




0 Responses to ஈழத்தமிழர்களுக்காக கையெழுத்து இயக்கம்! மன்மோகன் சிங் வீட்டை முற்றுகையிட்டு மனு கொடுக்க முடிவு! (படங்கள் இணைப்பு)