ஈழ தமிழ் மக்களுக்கு
ஆதரவாகவும், ஈழ மக்களுக்காக போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கிய
காவல்துறையினரை கண்டித்தும் திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ்
கட்சியினரை கண்டித்தும், ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கான மாணவர்
முன்னணியைச் சேர்ந்த மாணவர்கள் இன்று காலை 11 மணி அளவில் சென்னை
உயர்நீதிமன்றத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு தெற்கு ரயில்வே அலுவலகம்
முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சுமார் 500 மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டனர்.
இதில் பேசிய இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசன்,
இதில் பேசிய இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கணேசன்,
அமெரிக்காவின்
ஜெனீவா தீர்மானம் ஒரு ஏமாற்று வேலை. இனப்படுகொலை நிகழ்திய ராஜபக்சே
கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற ஒரு விசாரணைதான் தமிழ் மக்களுக்கு
விடிவை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு தன்னிச்சையாக இலங்கை அரசுக்கு
எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும். திருச்சியில் ஈழ மக்களுக்காக போராடி
வரும் மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்கியுள்ளனர். இதனை மாணவர்கள்
அமைப்பு கண்டிக்கிறது என்றார்.
படங்கள்: அசோக்.




0 Responses to ஈழத்தமிழர்களுக்காக மாணவர்கள் பேரணி (படங்கள் இணைப்பு)