Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, மத சார்பின்மைக்கு ஆதரவாக அனைவரும் ஒன்று கூடுவோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இவ்வாறு கூறியுள்ளார், பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

சோனியா காந்தி கூறுகையில், "நாட்டின் பொருளாதார சமூக முன்னேற்றம் ஒன்றோடு ஒன்று இணைந்து சென்று முன்னேற வேண்டும். இதற்காக நாம் மதவாத சக்திகளை எதிர்த்து போராவேண்டிய சூழலில் உள்ளோம். நமது நாடு மத சார்பற்ற நாடு. இதுதான் நமது பலம், முதலீடு. நாட்டின் மதசார்பின்மையை பாதுகாக்க காங்கிரஸ் முழு அளவில் தயாராகி வருகிறது.

சிறு பான்மையினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலனுக்காகவும், பெண்களின் கண்ணியத்தைக் காக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி  திட்டம், ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டம், பாரத் நிர்மான் திட்டம் இவைகள் பிற்படுத்தப்பட்டோர், அமைப்பு ரீதியில் வராத பிரிவினருக்கும் சமூக பாதுகாப்பு அளித்து இருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், சிறுபான்மையினரும் சுய சார்புள்ளவர்களாக வாழ்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.

0 Responses to மதசார்பின்மைக்கு ஆதரவாக அனைவரும் ஒன்று கூடுவோம் - சோனியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com