Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று இருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மாநில ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினால், கனிவுடன் பரிசெளிக்க வேண்டும் என்று, தேசிய வாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

மும்பை வெடிகுண்டு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு, உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  ஏற்கனவே சஞ்சய் தத் ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதால், இன்னும் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தல் போதும் என்கிற நிலையில், சஞ்சய்தத் சார்பில் மகாராஷ்டிர  மாநில ஆளுநருக்கு  சிறைத் தண்டனையை ரத்து செய்ய கோரி, கருணை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

சஞ்சய் தத்துக்கு பல தேசிய தலைவர்களும், நடிகர், நடிகைகளும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய வாத காங்கிரஸ், சஞ்சய் தத்துக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இதுத் தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் திரிவேதி கூறுகையில் "பொது மன்னிப்பு பெறுவதற்கான தகுதி சஞ்சய் தத்துக்கு உள்ளது. அவர் கருணை மனு தாக்கல் செய்தால் அதை மாநில  ஆளுநர் கனிவுடன், நேர்மையான சிந்தனையுடன்  பரிசீலிக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

இதேவேளை சமாஜ்வாத கட்சியின் தலைவர் அமர் சிங் மற்றும் லோக்சபா எம்.பி ராம்பூர் ஜெயா பிரதா ஆகியோரும் மகாராஹ்டிரா ஆளுனர் கே.சங்கரநாராயாணனை சந்தித்து சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்கும் படி கோரியுள்ளனர்.

சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை கேட்டு இதயம் உடைந்துவிட்டதாகவும், அவர் உண்மையில் ஒரு அப்பாவி எனவும் ஜெயா பிரதா தெரிவித்துள்ளார்.
அவரது தந்தை சுனில் தத் நாட்டுக்காக அதிகம் செய்திருப்பதாகவும் அவருக்கு என ஒரு நற்பெயர் இருப்பதாகவும், அதே நற்பெயரை சஞ்சய் தத்தும் கொண்டிருப்பதாகவும் ஜெயா பிரதா கூறியுள்ளார்.

0 Responses to சஞ்சய் தத்தின் விடுதலைக்காக மீண்டும் வலுப்பெறும் கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com