Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்

பதிந்தவர்: தம்பியன் 26 March 2013


'பழம்பெரும் திரைப்பட நடிகையான சுகுமாரி (74) இன்று சென்னையில் காலமானார்.

சென்னை தியாகராய நகரில்  வசித்து வந்த அவர் சில நாட்களுக்கு முன்னர் தீ விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் அவரது நெருங்கிய தோழியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேரில் மருத்துவ மனைக்கு சென்று அவரை நலம் விசாரித்திருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ், மலையாள திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1938ம் ஆண்டு நாகர் கோவிலில் பிறந்தவரான சுகுமாரி, பாசமலர், பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை உள்ளிட்ட புகழ்பெற்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். நம்ம கிராமம் படித்தில் நடித்தமைக்கு  2011ம் ஆண்டு சிறந்த துணை நடிகை விருது கிடைத்திருந்தது.

தனது 10 வயதிலேயே திரைப்படத்துறையில் காலடி எடுத்துவைத்த சுகுமாரி, 2000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்துள்ளார்.  இந்திய அரசின் பத்மசிறீ, தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருது என பல்வேறு விருதுகளை பெற்றவர் அவார்.  நான்கு முறை மாநில விருது பெற்றிருக்கிறார்.

இவருடைய கணவர் மறைந்த இயக்குனர் ஏ.பீம்.சிங் ஆவார். சுரேஷ் பீம் சிங் எனும் ஒரே ஒரு மகன் உள்ளார்.  லலிதா - பத்மினி-ராகினி சகோதரிகளின் தாயாரும், சுகுமாரியின் தாயாரும் உடன்பிறந்த சகோதரிகள் ஆவார்கள்.

சுகுமாரியின் இறுதிச்சடங்கு நாளை சென்னையில் நடைபெறுகிறது.

'எனக்கு சுகுமாரி அம்மையாரை 33 வருடங்களாக தெரியும். அவர் பல சமயங்களில் எனக்கு தாயாகவும், சகோதரியுமாக அன்பு காட்டியவர்' என நடிகர் மோகன்லால் உணர்ச்சிகரமாக தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.  தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், சுகுமாரியின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

0 Responses to பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com