Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழகத்தில் அதிகரித்து வந்த இலங்கைக்கு எதிரான போராட்ட நெருக்கடி காரணமாக, சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று, ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இதன் எதிரொலியாக சென்னையில் நடைபெறும் முக்கியமான ஆட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று, ஐபிஎல் அணிகள் போர்கொடி உயர்த்தி உள்ளன.

6 வது ஐபிஎல் கிரிகெட் திருவிழா வருகிற 3ம் திகதி தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-டெல்லி டேர்  டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மே மாதம் 26ம் திகதி வரை 58 நாட்கள் நடக்கிறது.

ஐபிஎல் 20 ஓவர் போட்டிகளில் விளையாட 13 இலங்கை வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கைத் தமிழர் பிரச்சனை காரணமாக சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட இலங்கை வீரர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நெருக்கடி காரணமாக சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று, ஐபிஎல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐபிஎல் அணிகளில் விளையாடும் பஞ்சாப் அணியைத் தவிர மற்ற அணிகளில் இலங்கை வீரர்கள் இடம்பெற்று உள்ளனர். சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதி மறுக்கப்பட்டதால், மற்ற ஐபிஎல் அணிகள் சற்று அதிருப்தியை வெளியிட்டன. சென்னை அணிக்கு சாதகமாக இருக்கும் வகையில், ஐபிஎல் அமைப்பு நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி இருந்தன.

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் முக்கியமான ஆட்டங்கள், மற்றும் பிளே  ஆப் சுற்று ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சில ஐபிஎல் அணிகள் போர்கொடி தூக்கியுள்ளன. இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடாததால் தங்களுக்கு பாதிப்பு இருப்பதாக 4 ஐபிஎல் அணிகள் கருதுகின்றன என்றும், தெரிய வருகிறது. இதனால் அந்த அணிகள் சென்னையில் நடைபெறும் முக்கியமான ஆட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று விரும்புகின்றன.

இலங்கை வீரர்கள் சில அணிகளில் கேப்டனாக இருப்பதால் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் கேப்டன்கள் இல்லாமல் எப்படி ஆடுவது என்பது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அணியின் வீரர்கள் கருதுகின்றனர். எனவே சென்னையில் நடைபெறவுள்ள முக்கியமான ஆட்டத்தை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று சில அணிகள் கோரிக்கை வைத்துள்ளன.

ஐபிஎல் அணிகளின் இந்த கோரிக்கை குறித்து, ஐபிஎல் ஆட்சி மன்ற குழு, இன்று அல்லது நாளை முடிவு எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

0 Responses to ஐபிஎல் அணிகள் திடீர் போர்கொடி : இலங்கை வீரர்களுக்கான தடை எதிரொலி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com