விழுப்புரத்தில்
பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள்
கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். இக் கூட்டத்துக்குப்
பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது
அவர், ‘’காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான வெளியுறவுத் துறைக் கூட்டம்
லண்டனில் நடைபெற உள்ளது. காமன்வெல்த் நாடுகளில் இருந்து இலங்கையை வெளியேற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் காமன்வெல்த் போட்டிகளை நடத்தக்
கூடாது. இது தொடர்பாக நான் பிரதமரை சந்தித்து முறையிடுவேன்.
தனித்
தமிழ் ஈழத்துக்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற் கத்தக்கது. இதே கருத்தைத்தான் டெசோ
வலியுறுத்தி வருகிறது. சர்வேத விசாரணை வேண்டும் என்றும் டெசோ வலியுறுத்தி
உள்ளது.
காங்கிரஸ்
கூட்டணியில் இருந்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறிவிட்டன. அக்
கூட்டணியில் மீண்டும் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பில்லை’’ என்று
கூறினார்.
இக்
கூட்டத்தில் மனித உரிமை இயக்கத் தலைவர் ஆ.லூசியா தலைமை தாங்கினார்.
மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர் எம்.எச்.ஜவஹிருல்லா, அருந்தமிழர்
விடுதலை இயக்கம் ஜக்கையன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.



0 Responses to காங்கிரஸ் உடன் மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: திருமாவளவன்