Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தமிழர்களின் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம், நேர்மையான தீர்மானங்களை மேற்கொள்ள தவறுவதாக இந்திய கம்யூனிச கட்சி தெரிவித்துள்ளது.

அதன் தேசிய செயலாளர் டி.ராஜா இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை விடயத்தை வலியுறுத்தி, தமிழக முதல்வர் தொடர்ந்து பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளார்.

அத்துடன் அண்மையில் தமிழக சட்ட சபையில் இது குறித்த தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருந்தது. எனினும் இது தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த உத்தியோகபூர்வு பதிலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களின் கோரிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

எனினும் இந்திய மத்திய அரசாங்கத்தின் இந்த மந்தமான நிலை, சாதாரண ஆட்சி மற்றும் சமஉடமைகள் சார்ந்த கொள்கைகளுக்கு எதிரானது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் இந்தியாவின் சில அமைச்சர்கள் இலங்கை விடயத்தில் ஊடகங்களுக்கு நல்ல பதில்களை வழங்குகின்ற போதிலும், உண்மையில் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து அதற்கு நேர் எதிராக செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 Responses to இந்தியா நேர்மையாக நடக்கவில்லை!- இந்திய கம்யூனிச கட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com