Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வைகோவை கைதுசெய்து வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக அரசாங்கத்தை கோரியுள்ளார்.

இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்துக்கு எதிராக தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடக்கு மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் காரியவசம் கருத்து வெளியிட்டதாக கூறி, அவரை கைதுசெய்ய வேண்டும் என்று வைகோ கோரியிருந்தார்.

சிங்கள மக்கள் ஒரிசா மற்றும் மேற்கு வங்காள பிரதேச வம்சாவளிகள் எனவே அவர்களுக்கு இந்தியா வரும் போது இந்திய அரசாங்கம் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பிரசாத் காரியவசம் கோரியிருந்ததாக வைகோ குற்றம் சுமத்தியிருந்தார்.

இதன்மூலம் இந்தியாவில் இனங்களுக்கு இடையில் பிரச்சினையை உருவாக்க பிரசாத் காரியவசம் முனைவதாக வைகோ குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையில் குறித்த கருத்து தொடர்பிலேயே வைகோவை கைதுசெய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார்.

0 Responses to வைகோவை கைது செய்யுங்கள்! - சுவாமி கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com