Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பின் ஒரு கட்டமாக தென்னிந்திய சினிமா கலைஞர்களும் போராட்டங்களில் இணைந்துள்ளமைக்கு இலங்கை சினிமா கலைஞர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அறியாமல் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் போலியான பிரச்சார பொறியில் சிக்கியுள்ளனர் என தெரிவித்துள்ள இலங்கையின் சிரேஷ்ட திரைப்பட நடிகர் ரவீந்திர ரந்தெனிய,  எதன் அடிப்படையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற திரைக்கலைஞர்களும் இலங்கைக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இவர்களது போராட்டங்களினால் தாம் பெரிதும் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும், ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட கலைஞர்களின் அனைத்து திரைப்படங்களையும் இலங்கையில் இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கைக்கு ஆதரவளித்து வந்த இந்தியாவில் இப்போது எதிர்ப்பலை உருவாகியிருப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் மாணவர்கள் போரட்டம் வலுப்பெற்றிருந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக அண்மையில் தென்னிந்திய இயக்குனர் சஞ்கத்தினர் சக திரைப்பட கலைஞர்களுடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதையடுத்து மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஏப்ரல் 2ம் திகதி தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை தமிழக முதல்வர் கச்சதீவை மீளக்கோரினால் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என அண்மையில் இலங்கையின் பௌத்த பிக்குகள் தெரிவித்த கருத்துக்களும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

அப்படியானால் சிங்களவர்களையும் தான் துணைக்கு அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும், ஏனெனில் அண்மையில் டெல்லியில் இலங்கை தூதுவர் காரியவசம் கருத்து தெரிவிக்கையில் சிங்களவர்கள் ஒரிசா, வங்காளம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்தவர்கள் என கூறியிருக்கிறார்.

ஆக இந்தியத்தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி இந்தியாவிலிருந்தே வந்தவர்கள் என புலனாவதாக மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

0 Responses to ரஜினி, கமல் திரைப்படங்களை இலங்கையில் புறக்கணியுங்கள் : இலங்கை சினிமா கலைஞர்கள் கோரிக்கை

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com