மும்பை சங்கிலித் தொடர் குண்டுவெடிப்பில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று இருக்கும் பாலிவூட் நடிகர் சஞ்சய் தத்,
'இதற்கு மேல் தண்டனையை குறைக்க கோரி மனுவேதும் தாக்கல் செய்ய போவதில்லை எனவும் விரைவில் சிறை செல்லவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மிகவும் மதிக்கிறேன். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பொது மன்னிப்பும் கேட்கப்போவதில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தை நான் மிகவும் மதிக்கிறேன். வருகிற ஏப்ரல் மாதத்தில் நான் நீதிமன்றத்தில் சரணடையலாம் என்று எண்ணிக்கொண்டுள்ளேன். சிறை போகும் வரையாவது எனது குடும்பத்தினருடன் அமைதியாக என்னை இருக்க விடுங்கள் என அவர் கூறினார்.' இப்பேட்டியின் போது தனது சகோதரி தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.
மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில், ஆயுதங்கள் பதுக்கிய குற்றசாட்டிலும், ஒரு சில சந்தேக நபர்களை தனது வீட்டில் தங்க வைத்த குற்றச்சாட்டுக்காகவும், கைதாகி ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, ஜாமினில் வெளிவந்த சஞ்சய் தத் இன்னமும் மூன்றரை வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டும் என உச்சநிதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
எனினும் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை குறைக்க வேண்டும், அல்லது முற்றாக பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாலிவூட் திரையுலகினர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிறை செல்லும் வரையிலாவது அமைதியாக இருக்க விடுங்கள் - சஞ்சய் தத்