Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகசட்ட சபையில் தமிழீழம் அமைவதற்கான ஒரு பொது வாக்கெடுப்பு ஐ.நாடுகள் சபையின் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஏக மனதாக தமிழ்நாட்டு முதலமச்சர் மண்புமிகு செல்வி. ஜெயலலிதா ஜெயராம் நிறைவேற்றி வைத்தற்காக பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பாகிய நாங்கள் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
இறுதிப் போர்காலகட்டத்திலும் சரி இன்றைய காலகட்டத்திலும் உடல்ரீதியாக  அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும் தான். அன்று கருவில் இருந்த சிசு சிதறிப்போக கொலை செய்யப்பட்டாள் பெண் இன்று கதறக்கதற பாலியல் துன்புறுத்தல் செய்யபடுகிறாள். இளம் விதவைகள் எத்தனை ஆயிரம்? பெற்றோரை இழந்த குழந்தைகள் எத்தனை? தாயக மக்கள் தினம் தினம் அனுபவித்துவரும் துன்பங்கள் சொல்லி அடங்காது.

அன்மையில் சிறுவன், 12 அகவையுடைய பாலாச்சந்திரன் கொடூரமானமுறையில் சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட காட்சி ஆதாரத்துடன் சனல் 4 தொலைக்காட்சியில் நிருபிக்கப்பட்டது. இது போன்று பல சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது ஒரு இனப்படுகொலை இல்லையா? இவற்றை எல்லாம் பார்த்தும் சர்வதேசம் பாரபட்சமாக நடந்து கொள்வது ஏன்?

இந்த நேரத்தில் தமிழ் நாட்டு முதல்வர், தமிழிழம், அமைவதற்கான வாக்கொடுப்பு நிறை வேற்றியதும் ஐ.நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கத்தை போர்குற்ற விசாரணை செய்ய வேண்டுமென்று உறுதிபட கூறிக் கொண்டிருக்கும் திருமதி நவநீதமபிள்ளை அவர்களும் பெண்களாக இருப்பத்தால் தான் ஈழதமிழினத்திற்கு இளைக்கப்பட்ட கொடுமைகளை கண்டு உரிமையோடு குரல் கொடுக்கிறார்கள் அந்த வகையில் நாங்கள் உள்ளம் நெகிழ்ந்து போகிறோம்.

இன்றைய கால கட்டத்தில் தமிழ் நாட்டு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம், மாணவர்களின் தன்னிச்சையான போராட்டம், மக்கள் போராட்டம், புலம் பெயர் மாணவர் போராட்டங்கள் என எங்களுக்கு ஒரு உந்து சக்தியாக தமிழர்கள் மனங்களில் நம்பிக்கையை  ஊட்டியுள்ளது. எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாக வாழும் எங்கள் உரிழைகளை மீட்டுத்தர எந்த நாடு முன் வரும் என்ற ஏக்கம் எதிர்பார்ப்பு இருந்தது. ஈழத்திமிழ் மக்கள் இந்தியாவை ஒரு நட்பு நாடகத்தான் நினைத்திருந்தோம். இந்தியமத்திய அரசு எங்களை விரேதியாகவே பார்க்கிறார்கள்.எது எப்படியோ இன்று இந்தத்தீர்மானம் அவர்கள் மனங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துமென நம்புகிறோம்.

சட்ட சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாடுகள் சபை வரை கொண்டு வந்து மாண்புமிகு முதலமச்சர் செல்வி. ஜெயலலிதா ஜெயராம் முதல்வராக இருக்கும் காலத்தில் தமிழீம் மலரும் என்று நம்பிக்கையோடும் அன்றையமுதலமச்சர் மாண்பு மிகு திரு.  M. G. இராமச்சந்திரனை இன்று உங்கள் உருவில் பார்க்கிறோம். அந்த உன்னதமனிதன் வழியில் நின்று தொடர்ந்தும் ஈழத்தமிழர்கள் வாழ்க்கைக்கு ஒரு சுபீட்சமான எதிர் காலத்தை ஏற்படுத்தித் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களுடன் நாங்களும் இணைந்து போராடுவோம்.

நன்றி

தமிழ்ப்பெண்கள் அமைப்பு பிரான்சு

0 Responses to இந்திய உப கண்டத்தை உலுக்கிய தமிழகச் சட்ட சபைத் தீர்மானம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com