Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியர்களுக்கு இடையே இனவெறியை தூண்டும் வகையில் பொய் பிரச்சாரம் செய்து வரும் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை நாடு கடத்த வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் உள்ள சிங்களவர்கள் வடஇந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் என்று மின்னஞ்சல் அனுப்பிய, இலங்கை தூதர் கரியவாசத்தை நாடு கடத்த வேண்டுமென்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்களவர்கள் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.வெறும் 12 சதவீத தமிழர்களுக்காக மட்டும் இந்தியா கரிசனை கொள்வது சாத்தியமற்றது  என்று இலங்கைத் தூதர் பிரசாத் கரியவஸம் ரகசிய பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இதற்கு ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த, இலங்கை தூதர் முயலுவதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to இனவெறியை தூண்டும் இலங்கை தூதுவரை நாடு கடத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com