Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அரசு தனது சென்னைத் தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து கேரளத்திற்கு மாற்றப்போவதாக அதிரடிச் செய்தி வெளியாகியுள்ளது.

சிறீலங்கா அரசு எடுத்திருக்கும் இந்த முடிவானது ஒரு நாடடின் தேசிய எல்லைக்குள் நடைபெறும் மாற்றம் என்ற கோணத்தில் பார்க்கப்பட முடியாதது.

தமிழக அரசு என்ற தனிக்கட்டமைவுடன் சிறீலங்கா அரசு செய்து கொண்டுள்ள இராஜதந்திர முறிப்பு என்ற கோணத்திலும் இதைப் பார்க்கலாம்.

கடந்த காலங்களில் சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு விரோதமான அரசு என்பதை தமிழக அரசு தெட்டத்தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

ஏற்கெனவே தமிழ் மண்ணில் இந்தத் தூதரகம் இருத்தல் கூடாது என்ற போராட்டங்கள் பல தடவைகள் நடைபெற்றுள்ளன.
மகிந்தராஜபக்ஷ அரவுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்களை தமிழக அரசு ஏகமனதாக சட்டபையில் நிறைவேற்றியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிங்கள அரசுக்கு எதிராக வரலாற்றுப் புகழ் மிக்க தீர்மானத்தை நிறைவேற்றி நடுவண் அரசுக்கும் அனுப்பி வைத்தார்.

சிறீலங்கா அரசு போர்க்குற்றவாளி அரசு என்று நடுவண்அரசு அறிவிக்க வேண்டுமென மாணவர் போராட்டம் வெடித்தது, சிறீலங்கா தூதரகம் முற்றுகையிடப்பட்டது.

சிறீலங்கா வீரர்கள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடாத்தக் கூடாது என்று தமிழக முதல்வர் தெளிவாக அறிவித்தார்.

ஐ.பி.எல் விளையாட்டில் பங்கேற்கக்கூட சிங்கள வீரர்கள் இந்திய மண்ணில் மிதிக்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து தமிழக அரசின் வலியுறுத்தலுக்கு அடிபணிந்து அரை மனதுடன் ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

இரண்டு இடத்தில் சிங்கள பிக்குகள் தாக்குதல்களுக்கு இலக்காகினர், இவைகள் அனைத்தும் சிறீலங்கா அரசுக்கு தமிழகத்தில் ஒரு தூதரகத்தை வைத்திருக்க வேண்டிய தேவையை இல்லாதொழித்தன.

இந்த நிலையில் அவசர அவசரமாக சிறீலங்காவிற்கான சென்னை கொன்சலேற் அதிகாரி கொழும்பு அழைக்கப்பட்டு நடாத்தப்பட்ட பேச்சுக்களை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை சிறீலங்கா தூதரகத்திற்கு தமிழகத்தைவிட கேரளம் பாதுகாப்பானது என்று கருதப்பட்டிருப்பது கூர்ந்து நோக்கப்பட வேண்டியதாகும், தமிழின அழிப்புப் போரில் சிங்கள அரசுக்கு கேரளத்தை சேர்ந்த மேனன், நாராயணன், நம்பியார் போன்ற பலர் துணை நின்றுள்ளதால் கேரளா தமக்கு வாய்ப்பான இடமாக சிங்களம் கருத இடமுண்டு.

ஆனால் தமிழக மண்ணை விட்டுப்போகும் ஒரு தூதராலயத்தை வரவேற்று கேரளம் தமிழகத்தின் உறவை இழக்கப்போகிறதா என்பது அடுத்த கேள்வி.

அதேவேளை ஜெனீவா தீர்மானத்தை இந்தியா நீர்த்துப்போக செய்தாலும், சிறீலங்கா அரசு அதை பெரும் கோபமாகவே பார்ப்பதை தற்போது நடைபெறும் நிகழ்வுகளும் மகிந்தவின் முள்முடி பேச்சும் படம் பிடித்துக் காட்டுகின்றது.

மாறாக இந்த முடிவானது தமிழக மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் பலர் கூறுகிறார்கள்.

இப்போது கேரளத்திற்கு மூட்டை கட்டும் சிங்கள அரசின் தூதரலாய நகர்வு எப்படியான பாதகங்களை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தமிழகத்திற்கு எதிராக சிங்கள அரசு அடுத்தகட்ட நகர்வுகளை நகர்த்த ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

0 Responses to சென்னையைவிட்டு மூட்டை கட்டுகிறது சிங்களத் தூதரகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com