Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கழுவில் ஏற்றப்பட வேண்டியது இலங்கை ஜனாதிபதி மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள சிலரும்தான் என தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தெரிவித்துள்ளார்.

மணப்பாறை நகரில் தமிழீழம் கோரி உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் நேற்று மாலை நகரின் வீதிகள் வழியாக “தமிழீழம் ஒன்றே” தீர்வு என்று முழக்கமிட்டு நகர்வலம் வந்தனர்.

அவர்கள் மத்தியில் தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.
மாணவர்கள் மத்தியில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,மஹிந்த ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளி. அனைத்துலக நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு,தக்க தண்டனை வழங்கப்படவேண்டும்.
இது மட்டுமல்ல ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு இந்தியாவும் காரணமாக இருந்திருக்கிறது.

இலங்கைக்கு ஆயுதங்களும், இராசயன ஆயுதங்களும், கொத்துக் குண்டுகளும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் வழங்கியது இந்தியாதான். இலங்கைக்கு ஆதரவாக படைகளை அனுப்பியது டெல்லி ஆட்சியாளர்கள்களே. உளவு பார்த்து போருக்குப் பணமும் கொடுத்தது வலுச்சேர்த்தார்கள்.

எனவே ராஜபக்சவுடன் சேர்ந்து அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் இவர்களும் ஈடுபட்டதை மறைக்கமுடியாது.
உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துத் தான் தீர வேண்டும்.

இந்திய இலங்கை கூட்டோடு சீனாவும், பாக்கிஸ்தானும் சேர்ந்து கோரத் தாண்டவம் ஆடின. இவர்களுக்கு எல்லாம் மேலாக தமிழினத்தின் காவலனாக வேலேந்தி நிற்க வேண்டிய கடமையிலிருந்த தமிழக அரசும் அப்போது என்ன செய்தது?
எனவே ராஜபக்சவை மட்டுமல்ல ஈழமக்களை அழிக்கக் காரணமாக இருந்த அனைவரையும் கழுவில் ஏற்றித் தண்டனைவழந்கவேண்டும் – என அவர் உரையாற்றினார்.

0 Responses to இந்தியாவும் போர்குற்றவாளியே அரிமாவளவன் பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com