Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழகம் முழுக்க ஈழ தமிழர்களுக்காக மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது ஐ.நா தீர்மானத்திற்கு பின்னும் போராட்டங்கள் தொடர்கின்றன மாணவர்களின் எழுச்சிகரமான போராட்டத்தின் அடுத்தபடியாக சேலம் மாணவர்கள் புதிய மாணவர்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்...சேலம் லட்சுமி அரங்கத்தில் திரண்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்தாலோசனையில் ஈடுப்பட்டனர்..அடுத்தகட்ட போராட்டங்களை பற்றி மாணவர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்தனர்..

இறுதியாக 'தமிழ் இன சுதந்திர செங்குருதி மாணவர் அமைப்பு' அல்லது 'தமிழ் இன சுதந்திர சுவாசம் மாணவர் அமைப்பு'  என எதாவது ஒரு பெயரில் இயங்க வேண்டும் என முடிவெடுத்தனர்....அதன் ஒருங்கிணைப்பாளர் ஜகதீஷ்,கிருஷ்ணகுமார்,ரியாஸ் அகமத்,மனோஜ்,மணி  ஆகியோர் நம்மிடம் பேசியபோது 

"மாணவர்கள் நாங்கள் தொடர்ந்து இங்கு சேலத்தில் போராடி வருகிறோம் பல்வேறு மாணவர்களும் தனித்தும், சேர்ந்தும் பல அமைப்புகளாக பிரிந்தும் போராடி வருகின்றனர் இப்படி இருந்தால் எதிரிக்கு தான் நன்மை என்பதால் பல்வேறு மாணவ அமைப்புகளிடமும் பேசியுள்ளோம் சேலம் நாமக்கல் கல்லூரி மாணவர்களிடம் பேசியுள்ளோம் அனைவரும் தற்போது ஒரு கூட்டமைப்பாக செயல்படலாம் என முடிவெடுத்துள்ளோம் அதன் தொடக்கம் தான் இந்த புதிய மாணவர் அமைப்பு இது அமைப்பு அல்ல புதிய மாணவர் படை...

இது விடுமுறைக்கான போராட்டமல்ல விடுதலைக்கான போராட்டம் எங்கள் லட்சியம் தனி தமிழ் ஈழம் தான்...

ஐ.நா கொண்டு வந்த தீர்மானம் இலங்கைக்கு தான் சாதகமானது இந்தியாவும் இலங்கையும் சேர்ந்துதான் ஈழ தமிழர்களை கொன்றது....அமெரிக்கா இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டு வர தான் ஈழ  விசயத்தை பேசுகிறதே தவிர உண்மையான அக்கறையில் இல்லை..
 
இவர்கள் ஈழ தமிழர்களுக்கு எதிராக தான் உள்ளனர் எனவே இவர்களை நாங்கள் நிராகரிக்க முடிவெடுத்துள்ளோம் முதல் கட்டமாக அமெரிக்காவின் கொக்க கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை நாங்கள் குடிக்காமல் நிராகரிக்க போகிறோம் அமெரிக்கா பொருட்களை புறக்கணிப்போம்.

கோக் பெப்சி எங்கள் கல்லூரிகளில் விற்க விட மாட்டோம் பொது வாக்கெடுப்பு எடுக்கும் வரை இந்திய தேர்தல்களில் எங்கள் முதல் வாக்கை பதிவு செய்ய மாட்டோம் கருப்பு பட்ஜ் அணிந்து தொடர் போராட்டம் செய்வோம் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்  1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெற்றது போல ஈழ சுதந்திரம் பெரும் வரை சேலம் மாணவர் கூட்டமைப்பின் போராட்டங்கள் தொடரும்...

மேலும் போராடும் மாணவர்களிடம் தரக்குறைவாக நடக்கும் காவல்துறை மீது துறை ரீதியான நடவடிக்கை வேண்டும் எங்கள் வீடுகளுக்கு சென்று பயமுறுத்தும் காவல்துறை, கல்லூரி நிர்வாகம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 

மேற்கண்டு போராட்டங்கள் பற்றி நாங்கள் பேசி முடிவெடுப்போம் அடுத்தடுத்து தொடர் போராட்டங்கள் அகிம்சை வழியில் நடக்கும்  "
என்றனர்
 புதிய பரிமாணம் எடுத்துள்ளது மாணவர்கள் போராட்டம்....
- இளங்கோவன்

0 Responses to விடுமுறைக்​கான போராட்டமல்​ல விடுதலைக்கா​ன போராட்டம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com