Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


விளையாட்டை அரசியலுடன் தொடர்பு படுத்துவதை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் போட்டித் தொடரில் இருந்து இலங்கை வீரர்களை நீக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை உயர்ஸ்தானிகர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளை சென்னையில் நடத்த கூடாது என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இதனையும் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் விடயங்களை ராஜதந்திர ரீதியாக அணுகாமல், அதனோடு விளையாட்டுக்களை இணைப்பது முறையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் விளையாட்டுத்துறையில் சாதிக்க நினைப்பவர்களின் வாழ்க்கையே பாதிப்படைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை!- ஜெயலலிதாவின் அறிவிப்பை பிரசாத் காரியவசம் விமர்சனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com