இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், தனி ஈழம்
குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தவும் தமிழக சட்டசபையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டமையை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் 14 முக்கிய தீர்மானங்களில் இது முக்கியமானதாகும். அதற்கு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துக்காட்டாக அமைவதாக உள்ளது. அதனை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் டெசோ தலைவர் கருணாநிதி பற்றிய விமர்சனத்தின் மூலம் நமது பொது எதிரி ராஜபக்ஷ என்பதற்கு பதில் இங்குள்ள அரசியல் தலைவர் கருணாநிதிதான் என்பது போன்ற விரும்பதகாத போக்கு ஏற்கத்தக்கது அல்ல என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்.

0 Responses to தனி ஈழம் குறித்து வாக்கெடுப்பு: சட்டசபை தீர்மானத்துக்கு கி.வீரமணி வரவேற்பு