இந்தியத் தலைநகர் டெல்லியில் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் 'ஆண்மை நீக்கம்' என்ற தண்டனையை முன்மொழிந்தார்.
அதனைத் தொடர்ந்து 'ஆண்மை நீக்கம்' என்ற சொல் தமிழர்கள் மத்தியில் வாதப் பொருளாக மாற்றம் பெற்றது.
இந்த ஆண்மை நீக்கம் என்ற சொல் ஒன்றும் புதிதானது அல்ல. உலக வரலாற்றில், ஆண்மை நீக்கம் என்பது தண்டனையாகவும், பல்வேறு சமய, சமூக ரீதியாகவும் பல்வேறு நாடுகளிலும் நடைமுறையில் இருந்துள்ளது.
13 ஆம் நூற்றாண்டில் அரேபியர்களால் நடாத்தப்பட்ட அடிமை வர்த்தகத்தின்போது சுமார் மூன்று கோடி ஆபிரிக்க கறுப்பின இளைஞர்கள் அடிமைகளாக விற்பனை செய்வதற்காக ஆண்மை நீக்கம் செய்யப்பட்டார்கள். அரண்மனையிலும், அந்தப்புரங்களிலும் வேலைபார்க்கும் ஆண்கள் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட கொடுமையும் பல நாடுகளில் நடந்தேறியுள்ளது.
உடலியல் ரீதியாக நிகழ்த்தப்பட்ட இந்த ஆண்மை நீக்கும் செயல் இப்போதும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனையாக இப்போதும் சில நாடுகளில் அமூலில் உள்ளது.
தமிழில் 'காயடித்தல்' என்ற வார்த்தையுடன் எருதுகளுக்கும், நாய்களுக்கும் இந்த ஆண்மை நீக்கம் இப்போதும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதைப் போலவே மன நீதியாக ஆண்மை நீக்கம் செய்யப்படுவது இப்போதும் மனித வர்க்கத்தில் தொடர்ந்தே வருகின்றது.
தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் மாணவர் எழுச்சியும், அதனைத் தொடர்ந்த மக்கள் ஆதரவும் மன ரீதியாக ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட தமிழக காங்கிரசாருக்கு பலத்த சங்கடங்களை உருவாக்கியுள்ளது.
தமிழீழ மக்கள்மீது சிங்கள ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலையினையும், அதைப் பின்னின்று இயக்கிய இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களது கொடூரத்தையும் மன நீதியாக ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட தமிழக காங்கிரஸ்காரர்கள் சிலரை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது.
தமிழீழ மக்கள்மீது சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொண்ட வன்முறைகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் மன ரீதியாக ஆண்மை நீக்கம் பெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியினர் மாணவர்கள்மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்கள்.
அதற்கும் குறைவற்ற விதத்தில், கடந்த புதன்கிழமை புதிய தலைமுறை தொலைக் காட்சியின் 'நேர்படப் பேசு' வாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நடந்துகொண்ட அநாகரிகமான நடவடிக்கையும், அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தின்மீது அவர் விடுத்த அச்சுறுத்தலும் அவர் மனரீதியாக ஆண்மை நீக்கம் பெற்றதை உறுதிப்படுத்துகின்றது.
உலகில் எந்த மனிதனும் தனது சொந்த இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலையை தமிழக காங்கிரசார் போல் இப்போதும் நியாயப்படுத்தமாட்டார்கள்.
இந்த இனப்படுகொலையின் பங்குமாரரான இந்திய காங்கிரஸ் கட்சியின் 'சிங்கள ஆட்சியாளர்களே, தம்மீது சுமத்தப்பட்ட போர்க் குற்றச்சாட்டினை விசாரிப்பது' என்ற பொறிமுறையை நாகரீகம் அடைந்த எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
அத்துடன், இனப் படுகொலை புரிந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கமாட்டான். மன ரீதியாக ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட தமிழக காங்கிரசின் அராஜக செயற்பாடுகள் மாணவர்களை வன்முறைக்கு இழுக்கும் நோக்கத்தைக் கொண்டது.
இது குறித்து, தமிழக மக்கள் புரிதலுடன் அமைதி காப்பதுடன், காங்கிரஸ் கட்சியினர்மீது முதலில் பொருளாதாரத் தடையை மேற்கொள்வதுடன், தமிழக அரசியலிலிருந்து அவர்களை அப்புறப்படுத்துவதே தமிழகத்தைத் தூய்மைப் படுத்துவதற்கான முதல் படியாக அமையும்.
அகத்தியன்

0 Responses to ஆண்மை நீக்கமும், தமிழக காங்கிரஸ் கட்சியும்!