இலங்கை அரசாங்கம் தாம் வழங்கிய வாக்குறுதிகளை
செயற்படுத்தாமை காரணமாகவே ஐக்கிய நாடுகள் சபையில் கேள்விக்கு
முகங்கொடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் இலங்கையின் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல், உறுதிப்பாட்டை நிறைவேற்றுதல் போன்றவற்றில் நம்பகத்தன்மையின்மை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேசம் யோசனையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ளது என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் போருக்கு முன்னரும் பின்னரும் சர்வதேசத்துக்கு பல உறுதிமொழிகளை வழங்கியது. எனினும் அவற்றை அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட யோசனையின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இலங்கை பின்பற்றவில்லை.
விடுதலைப் புலிகளுக்கு அப்பால் காணாமல்போன பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்பில் உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் நடைமுறை அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுக்காணும் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லை என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஜனநாயக வழிகளாக காணப்பட்ட பொலிஸ் ஆணைக்கு குழு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் ஏனைய ஆணைக்குழுக்கள் அரசாங்கத்தினால் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
எனவே இதற்கு மத்தியில் அரசாங்கம் வடக்குகிழக்கு மக்களுக்கு நியாயமான நீதியான தீர்வை வழங்கும் என்று எதிர்ப்பார்ப்பதில் அர்த்தமில்லை.
இதன்போது சர்வதேசத்தின் தலையீட்டின் அடிப்படையில் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் தீர்வு ஒன்று கிடைப்பதற்கான ஏதுநிலைகளே காணப்படுகின்றன.
அவ்வாறான நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே சர்வதேச தலையீட்டின் கீழ் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் உரிய தீர்வு கிடைக்கும் என்று தாம் நம்புவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

0 Responses to அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வை தராது!