Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று சனிக்கிழமை அதிகாலை நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து 50 மைல் தொலைவில் 80 கி.மீ தொலைவில் போகரா எனும் இடத்தில் மையம் கொண்டு 7.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஒன்று தாக்கியிருப்பதாகவும் இதைத் தொடர்ந்து பல தொடர் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

இதனை நேரில் பார்த்த மக்களின் கருத்து அடிப்படையில் இப்பூகம்பத்தால் 5 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டும் பலர் காயமடைந்தும் இருப்பதாகவும் தெரிய வருகிறது. அப்பிரதேசத்தில் உள்ள வீடுகள், கட்டிடங்கள், ஆலயங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதற்கான ஆதாரங்களுடன் டுவிட்டரில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.  காத்மண்டு பள்ளத்தாக்கு மிக அடர்த்தியான 2.5 மில்லியன் சனத்தொகை கொண்டதாகும். அமெரிக்க புவிவியல் தகவல்கள் படி உள்ளூர் நேரம் சுமார் 11.56 மணிக்கு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புக்கள் குறித்து இன்னமும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைவிட காத்மண்டுவில் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க கட்டடங்கள் சில இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் சாலைகள் பிளவுற்றிருப்பதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப் பட்டிருப்பதாகவும் கூட அறிவிக்கப் பட்டுள்ளது. 7.9 ரிக்டர் நில அதிர்வைத் தொடர்ந்து 30 நிமிடங்களுக்குள் அதிகபட்சம் 6.6 மற்றும் 5.1 ரிக்டர்களிலும் தொடர் அதிர்வுகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்து வீதிகளில் குவிந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக இமய மலைத் தொடரிலுள்ள எவரெஸ்ட் சிகரத்துக்குக் கீழே பனிப்பாறைச் சரிவுகள் ஏற்பட்டதாகவும் கூட அறிக்கைகள் கூறுகின்றன. நேபாளத்தில் மட்டும் இதனால் சேதங்கள் அதிகம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப் படும் நிலையில் குறித்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் டெல்லி, பீகார், மேற்கு வங்கம், தமிழகம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் உணரப் பட்டதாகவும் நில நடுக்கம் தொடர்பான அச்சத்தால் டெல்லி மெட்ரோ ரயொல் சேவை நிறுத்தப் பட்டதுடன் பீகாரிலும் நேபாளத்திலும் மாபைல் சேவையும் தற்காலிகமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் தாக்கி சில நிமிடங்களுக்குள் வட இந்தியாவில் இதன் பாதிப்பு பற்றி அறிவதற்காக இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி இது குறித்து முக்கிய மந்திரிகளுடன் கலந்தாலோசனை செய்ததுடன் தற்போது சூழ்நிலையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்தில் நேற்று வெள்ளிக்கிழமை 5.9 ரிக்டர் அளவில் வலிமையான நிலநடுக்கம் தாக்கியிருந்தது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகள் அடைக்கப் பட்டும் ரயில் சேவை ரத்து செய்யப் பட்டும் இருந்தன. ஆனால் சேத விபரம் குறித்து முழுமையான தகவல் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நேபாளத்தில் பாரிய நிலநடுக்கம் : டெல்லி வரை உணரப்பட்டுள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com