Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


ஈழத்தமிழ், மக்களின் இனவழிப்பின் உச்சநாளான 2009 மே 18 தமிழர்களின் வரலாற்றில் இனி எப்போதும் நினைவு கூருகின்ற நாளாகவும் இனவழிப்பின் நினைவு நாளாகும் மே 18. ஒரு நாட்டின் விடுதலைக்காக போராடுகின்ற போராடியதோர் இனத்தின் மீது, அத்துமீறிய போரை நடாத்திவிட்டு தாம் இழைத்த படுகொலைகளையும், மனிதவிரோத செயல்களை சுலபமாக மற்றவர்கள் மீது திணித்துவிட்டு தப்பிக்கொள்ளும் மார்க்கமாக கொண்டு வரப்படுவதே போர் குற்றம் என்கிற சொற்பதமும், அதற்குள்ளேயான நடவடிக்கைகளும், தண்டனைகளுமாகும்.

தமது சொந்த நாட்டின் குடிமக்கள் மீது கடந்த 60 வருடங்களுக்கு மேலாக திட்டமிட்டதொரு இனஅழிப்பினை செய்து விட்டு அதற்கெதிராக போராடிய மக்களையும், போராட்டத்தையும் போர் என்றும், குற்றம் என்றும், குற்றவாளிகள் என்றும் கூறி தனது மிகப்பெரிய இனவழிப்பை மூடிமறைக்க இலங்கையரசு முயற்சித்து தப்பித்துக்கொள்ளும் வேளை இது போர்க்குற்றமல்ல இனவழிப்பே என்பதை இன்று சர்வதேச அமைப்புகள், ஊடகங்கள் ஆவனங்கள் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வரும் வேளை இதற்கு நீதி சொல்லக்கூடியவர்கள், உரியவர்கள் உண்மை தெரிந்தும் இன்னும் வாய்திறக்காமல் இருக்கின்ற இந்நேரத்தில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்மக்கள் தமது உறுதியான எண்ணப்பாட்டினை தெரிவிக்கும் ஒர் நாளாகவும் நீதி கேட்கும் ஒரு நாளாகும். தமிழினவழிப்பு நினைவு நாள் 18 ஆகும்.

இந்நாளினை முன்னிட்டு பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அனைத்து தமிழர் கட்டமைபுகளுடன் இணைந்து பல பரப்புரைகளும் செயற்பாடுகளும் நடைபெறவுள்ளன. மே 1ம் நாள் முதல் 18ம் நாள் வரை பிரான்சு மூதாளர்கள் இல்லம் அடையாள உண்ணா மறுப்பு கவனயீர்ப்பு போராட்டத்தையும் 18ம் நாள் மாபெரும் நினைவுப்பேரணியையும் நடாத்துகின்றது. இப் பேரணியில் பிரான்சில் வாழும் தமிழ்மக்களில் 50ஆயிரம் தமிழ் மக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான பரப்புரைகளையும், முன்னெடுப்புகளையும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏனைய உப கட்டமைப்புகளுடன் இணைந்து செயற்படத்தொடங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான சென்ரனி பகுதியில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றிருந்தது. காலத்தின் தேவையை தெரியப்படுத்தியதுடன் இன்று தாய்தமிழ்நாட்டு மாணவர்களும், மக்களும், உணர்வாளர்களும் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் நீதிக்கான போராட்டங்கள், பற்றியும் அதற்காக எம்மால் வழங்கக்கூடிய ஆதவும் வலுபற்றியும் கதைக்கப்பட்டது. மே 18 பேரணிக்காக இவ்வாறு தொடர்பரப்புரைகள் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களிலும், செய்யப்படவுள்ளன என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் தொடர்ச்சியான தகவல் பெற்றிட தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு- 01 43 58 11 42 என்கிற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

0 Responses to தமிழின அழிப்பு நாள் மே 18 – பிரான்சில் நினைவுப்பேரணி 2013

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com