ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த வீர பாண்டியக்கட்ட பொம்மனுக்கு கயத்தாறில் மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டப் பேரவையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கடம்புரை ராஜூ கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா எழுந்து குறுக்கிட்டு பதில் அளித்தார். ஆங்கிலேயர் ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த உணர்வுபூர்வமான சுதந்திர போராட்டத்தில் உண்மையான முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
அவருடைய வீரத்தையும்இ தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. ஆகவே அவருடைய நினைவை போற்றும் வகையில் கயத்தாறில் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு மணிமண்டபம் எழுப்பப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடம்புரை ராஜூ, தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ சுந்தர்ராஜன், இந்திய கம்யுனிஸ்டு உறுப்பினர் பாலபாரதி, காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத், சமத்துவ மக்கள் கட்சி உறுப்பினர் சரத்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்து பேசினார்கள்.




0 Responses to வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கயத்தாறில் மணிமண்டபம் : ஜெயலலிதா அறிவிப்பு