சென்னை நகரில் ஏழை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில்
மலிவு விலையில் இட்லி, மதியம் சாப்பாடு வழங்க மாநகராட்சி சார்பில் ‘அம்மா
உணவகம்’ தொடங்கப்பட்டது.
முதலில் 15 உணவகங்கள் மட்டும் திறக்கப்பட்டது. ஏழை தொழிலாளர்கள், பொது மக்களின் வரவேற்பு காரணமாக மேலும் 58 உணவகங்கள் திறக்கப்பட்டன.
ஒரே நாளில் 127 இடங்களில் அம்மா உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன் சிங் மூலம் திறந்து வைத்தார். இதன்மூலம் சென்னை நகரில் 200 வார்டுக்கும் தலா ஒரு உணவகம் வீதம் 200 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரு இட்லி ரூ.1-க்கும், சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3 என்ற விலையில் விற்கப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த அளவுக்கு மலிவு விலையில் இட்லியும் சாப்பாடும் வழங்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியவர்கள் ஆச்சரியப்படும் வகையில் வெற்றிகரமாக இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டு பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒவ்வொரு உணவகத்திலும் தலா 1700 இட்லிகள் விற்பனையாகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் விற்று தீர்ந்து விடுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 200 உணவகங்களிலும் மொத்தம் 2.73 லட்சம் இட்லிகள் விற்பனையாகிறது.
இதே போல் 200 உணவகங்களிலும் 62,500 தட்டு சாம்பார் சாதமும், 34,500 தட்டு தயிர் சாதமும் விற்பனையாகிறது. இங்கு வீட்டில் தயாரிப்பது போல் ருசியாகவும் தரமான தாகவும் இருப்பதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 3 ஆயிரம் பெண்கள் வேலை வாய்ப்பும் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.9 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படுகின்றது.

0 Responses to அம்மா உணவகத்தில் 2.37 லட்சம் இட்லிகள் விற்பனை: மூவாயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு