Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதிப்பிற்குறிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு திருவாரூர் மன்னார்குடியில் உள்ள கழகத்தின் உண்மை ரத்தத்தின் ரத்தங்கள் எழுதும் கடிதம்.

நாங்கள் இதுவரை எழுதிய பல கடிதங்கள் தோட்டத்திற்கு வந்து பிறகு அந்த கடிதங்கள் மன்னார்குடிக்கே வந்து கொண்டிருக்கிறது. அது எப்படி என்பது எங்களுக்கு தெரியவில்லை. அந்த ஓட்டையை முதலில் அடையுங்கள். இந்த ஓட்டையிருந்தால் கழகத்திற்கு இழப்புகள் நேரிடலாம். 

சகோதரி சசிகலாவின் தம்பி திவாகரன் தயவில் முதலில் நியமன எம்.பி ஆனவர் ஆர்.காமராஜ். அப்போதெல்லாம் திவாகர் வீட்டில் எந்த நேரமும் கிடப்பவர் ஆர்.காமராஜ். பின்னாளில் அவருக்கே மா.செ பொருப்பையும் கொடுத்து 15 ஆண்டுகள் கடந்தும் அந்த பதவியை எடுக்காமல் நிரந்தர மா.செ என்று சொல்லும் அளவில் இருந்து வருகிறார். அதன் பிறகு நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தினார். அப்போது இவரது ஆதரவாளர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் அனைவரையும் நன்னிலம் அழைத்துச் சென்றார். 

மன்னார்குடியில் கழக வேட்பாளராக போட்டியிட்ட சிவாராஜமாணிக்கத்திற்கு எதிராக தி.மு.க சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டு அவருக்கு மாலை மரியாதை செய்தார் காமராஜ் ஆதரவாளர் தியாகராஜன். பின்னால் இவருக்கே கவுன்சிலர் சீட் கொடுத்து வெற்றி பெற செய்து,  நகராட்சியில் வரி மதிப்பீட்டுக் குழு பொருப்பும் கொடுத்தார்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு மன்னை நகர் மன்றத்தை திவாகர் துணையோடு பிடித்தோம். வழக்கறிஞர் சுதாவை நகர்மன்றத் தலைவராக நியமித்தோம். ஆனால் து.தலைவரை அமைச்சர் நியமித்தார். நகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் கூட்டம் நடக்கும் போது து.தலைவர் வரலெட்சுமி அடங்கிய அமைச்சர் ஆதரவு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து கூட்டத்தை முடக்குகிறார்கள். து.தலைவர் வரலெட்சுமி அமைச்சருக்கு ரொம்ப வேண்டியவர்.

இப்படிப் பட்டவருக்கு மந்திரி பதவியையும் திவாகர் வாங்கி கொடுத்தார். மந்திரி ஆனதும் வரவேற்பு கொடுத்தோம். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் காமராஜ்,  எனக்கு இந்த பதவிகள் கிடைக்க செய்தவர் அண்ணன் ( பாஸ் ) திவாகர் தான். அதனால் அவருக்கு தான் நன்றிகள் சொல்ல வேண்டும் என்று நன்றி மழ்கினார். இதை சாந்தி தியேட்டர் வாசலில் கண்ணாடி ஏற்றிய காரில் இருந்து ரசித்தார் திவாகர்.

இன்றும் திவாகர் விசுவாசியாகத் தான் இருக்கிறார். அதாவது ரிஷியூர் கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் ஒரு பகுதி அமைச்சர் காமராஜ் மனைவி லதா பெயரில் தான் உள்ளது. அதே போல மன்னார்குடி நகரில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் அமைச்சரின் அக்கா மகன் குமார் பெயரில் இன்றும் உள்ளது. இது மட்டுமின்றி திவாகரின் சொத்துக்களில் பாதிக்கு மேல் அமைச்சரின் பினாமி பெயரில் தான் உள்ளது.

இந்த நிலையில் தான் திவாகருக்கு எதிராக தாங்கள் நடவடிக்கை எடுக்க தொடங்கியதும்.. அவரை விட்டு ஒதுங்கியது போல காட்டிக் கொண்டு தனக்கு எதிராக இருப்பதாக நினைத்து கட்சியின் தலைமைக்கு தவறான தகவல் கொடுத்து பல முக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்தார். அதாவது நீடாமங்கலம் ஒன்றிய சேர்மனாக இருந்த எஸ்.காமராஜ், 3 முறை கவுன்சிலராக இருந்து இப்போது வைஸ் கேட்டதால் வழக்கறிஞர் ஆனந்தராசு, குடவாசல் எம்.ஆர் மற்றும் பலர் நீக்கம் பெற்றனர்.

கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியின் சீனியர்களாக இருந்த மாஜிக்கள் அழகு.திருநாவுக்கரசு, ஞானசேகரன், ஞானசுந்தரம் போன்ற முக்கிய நபர்கள் இருந்தால் நம்மால் வளர முடியாது என்று நினைத்து அவர்களாக கட்சியை விட்டு வெளியேறும் அளவிற்கு நெருக்கடிகளை கொடுத்து வெளியேற்றினார். 

இப்போது பாருங்கள் கோயில் திருவிழாவில் திவாகருடன் கலந்து கொண்டதாக சொல்லி 4 பேரை நீக்கம் செய்ய வைத்துள்ளார். அதே திருவிழா சிறக்க பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்தவர் அமைச்சர் காமராசும், அவரது சம்மந்தி சேரன்குளம் மனோகரனும் தான். அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இதே போல நீக்கம், நடவடிக்கை என்று போனால் மன்னார்குடியில் அ.தி.மு.கழகம் இருந்ததாக மட்டும் தான் சொல்ல முடியும். விரைவில் கழகம் இல்லாத நகரம் மன்னார்குடி என்ற பெருமையை கழக தலைமைக்கு பெற்றுத் தருவார்.

இப்பகுதியில் வரும் அனைத்து வேலைகளையும் அவரது அக்கா மகன் குமார் மூலம் சம்மந்திக்கும், உறவினர்களுக்கும் பிரித்து வேலை செய்கிறார்கள். அமைச்சர் ஆன பிறகு 2 ரெடிமிக்ஸ் பிளான்ட் போட்டுள்ளார். (எல்லாம் அக்கா மகன், அண்ணன் மகன் பெயரில்)

காலை 8 மணி வரை அவர் வீட்டுக்கு எதிரில் சாலையில் நின்று

தான் அவரை பார்க்க வேண்டும். இவர் மன்னார்குடிக்கு வந்தால் அவர் தங்கும் பகுதிக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. மற்ற பகுதிகள் இருளில் தான் இருக்கும். சில நாட்களுக்கு முன்பு நடந்த அவரது அக்கா மகன் திருமணத்திற்க்காக தடையில்லா மின்சாரம் கொடுத்தார்கள்.
இப்போது திருச்சியில் பச்சை அரிசி அறைக்கும் ஒரு நவீன் அரிசி ஆலையும், திருப்பூரில் ஒரு டெக்ஸ் டைல், சிவகங்கையில் ஒரு ஆயில் மில், கும்மிடிபூண்டியில் ரெடிமிக்ஸ், மன்னை வடக்கு வீதியில் பெரிய ஓட்டு வீடுகள் சில சி களில் வாங்கி இருக்கிறார். இது இல்லாமல் இன்னும் ஏராளமான சொத்துக்களை அக்கா மகன் குமார், அண்ணன் மகன் கார்த்திக் பெயரில் வாங்கி இருக்கிறார்.

இந்த தகவல்களை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுத்து விடக் கூடாது என்பதற்க்காகத் தான் மற்றவர்கள் மீது உளவுத்துறை மூலமாக ஏதாவது புகார்களை அனுப்பி நடவடிக்கை எடுக்க வைத்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்ட உளவு தகவல்களை தலைமைக்கு அனுப்பும் இடத்தில் இருப்பவர் டி.எஸ்.பி. சாமிநாதன். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ள சிறு கிராமம். இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெறப் போகிறார். இவரது முக்கிய பணி அமைச்சர்கள், அமைச்சராக துடிப்பவர்களை பார்த்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உளவு தகவல்களை தலைமைக்கு அனுப்புவதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளார். 

இந்த வகையில் திருச்சியில் பெண் பிரச்சணையில் சிக்கி இருக்கும் மாஜி மந்திரிக்கு ஆதரவாக உளவு பணியை சிறப்பாக செய்து. அதற்கான பலனை அடைந்தார். இப்போது மன்னார்குடி குடும்பத்திற்கு எதிரான உளவு பணிகளை செரியாக தலைமைக்கு கொண்டு சேர்த்து வருகிறார். அதற்காக அமைச்சர் காமராஜ் தயவில் ஒரு சி. மதிப்பீட்டில் திருச்சி புறநகர் பிராட்டியூர் காவேரி நகரில் ஒரு வீடு கட்டி முடித்துள்ளார். 

இந்த வீட்டிற்கு அடித்தளமே 41 அடிகள் போடப்பட்டுள்ளது. இந்த வீட்டிற்கான மரங்களை வட மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்தவர் மாஜி தி.மு.க கவுன்சில் மூக்கையன்தான். இதற்காக இந்த உளவு அதிகாரி இவர்களிடம் விசுவாசமாக இருக்கிறார். விசுவாசம் காட்டும் பகுதிகளில் மட்டும் தன் உறவினர்களையும் தன் ஆதரவான காக்கிகளையும் உளவுத் துறைக்கு நியமித்துள்ளார். இவர் மேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணையும் நடந்துள்ளது.

சில மாதங்களில் பணி ஓய்வு பெற்றாலும் அவரது பணி காலத்தை நீடித்து வைத்துக் கொள்ள அமைச்சர் காமராஜ் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். இந்த வீட்டிற்காக மட்டும் தனி குடிநீர் தொட்டியும் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி சாமிநாதன் வீட்டை ஆய்வு செய்தாலே அவ்வளவு தொகை செலவு செய்து கட்ட முடியுமா என்பது தெரியும். இதற்காக ஒரு விசாரணை குழு அமைத்தால் உண்மைகள் வெளிப்படும். ( இத்துடன் அந்த வீட்டின் படங்களும் உள்ளது ) 

இப்போது தனது மனைவி லதா, மற்றும் அக்கா மகன் குமார் பெயரில் உள்ள திவாகரின் சொத்துக்களை அமைச்சரின் பினாமி பெயர்களுக்கு எழுதிக் கொடுத்தால் இது போல உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் அனுப்புவதை நிறுத்திக் கொள்வதாக சொல்லி வருகிறாராம். அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படலாமா அம்மா.

கடந்த மாதம் கூட நகரச் செயலாளர் மாதவன் பெயரில் தலைமைக்கு இது குறித்து ஒரு புகார் அனுப்பியும் அந்த புகாரின் நகல் அமைச்சரின் ஆட்கள் வைத்துக் கொண்டு புகார் அனுப்பியவர்களைத் தேடுகிறார்கள்.

இவரால் நியமிக்கப்பட்டவர் தான் அரசு வழக்கறிஞர் ஜீவானந்தம் அமைச்சர் சொல்படி கேட்டவர். ஆனால் அம்மா இப்போது அவரை நீக்கிவிட்டு எந்தக் கட்சியையும் சாராத சம்பத்குமாரை போட்டிருக்கிறீர்கள். இவரையும் நீக்க அமைச்சரிடம் உள்ள குழு தயாராகிக் கொண்டிருக்கிறது.

நீதிமன்ற உத்தரவை மீறி நமது கட்சிக்காரர் எலக்ட்ரீசியன் வீரகுமார் சொத்தை முன்னால் வைஸ் பாண்டியன் அபகரித்தார். அதை மீட்டுக் கொடுங்கள் என்று அமைச்சரிடம் பல முறை சென்றும் பலனின்றி கட்சி அலுவலகம் முன்பே தீ குளித்து இறந்தார். அந்த பிரச்சணைக்கு காரணமான பாண்டியன் மேல் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கிறார் அமைச்சர்.
இப்போது கடந்த சில நாட்களாக பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கோயில்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்.

இவரால் திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க அழிவு பாதையை நோக்கி போகிறது என்பதை இந்த கடிதம் மூலம் சொல்லிக் கொள்கிறோம். இந்த கடிதமும் தங்களுக்கு கிடைக்கிறதா அல்லது அமைச்சர் கைக்கே போகிறதா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.. நன்றி.’’
இவ்வாறு அந்த கடிதம் நீண்டுள்ளது. இந்த கடிதம் ஜெ. கைக்கு போகுமா என்பது தான் தெரியவில்லை. ஆனால், ஊடகத்தின் மூலம் கொண்டுவந்துவிட்டதால் ஜெ., பார்வைக்கு செல்லும்!

-இரா.பகத்சிங்.

0 Responses to மன்னையில் இருந்து சென்னைக்கு ஒரு கடிதம்! ர.ர.க்களின் குமுறல்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com