Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழக மீனவர்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் பாரபட்சமாக செயற்படுவதாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது கட்சி உறுப்பினர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இலங்கை தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் அசமந்தமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் இரண்டு கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கு தொடர்பில் இரண்டு இத்தாலியின் கடற்படை வீரர்கள் தொடர்பில் இந்தியா கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள் குறித்து ஏன் இந்தியா மௌனமாக இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Responses to தமிழக மீனவர்கள் தொடர்பில் மத்திய அரசாங்கம் அசமந்த போக்கு!- கருணாநிதி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com