Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தூக்கில் இடப்பட்ட அஜ்மல் கசாப், அடிக்கடி கனவில் வந்து பயமுறுத்துவதாக மும்பைத் தாக்குதல் தொடர்புத் தீவிரவாதி அபு ஜிண்டால் கூறியதைத் தொடர்ந்து அவரை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பைத் தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப், இரண்டு மாதங்களுக்கு முன் தூக்கில் இடப்பட்டார். இதே தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு தீவிரவாதி அபுஜின்டால் மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்ற அபு ஜிண்டால், சவூதி அரேபியா சென்றபோது, அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

முதலில்  திஹார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை, பின்னர் மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக மும்பை கொண்டுவரப்பட்டு, ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்தர் ரோடு சிறையில் கசாப் இவரை அடையாளம் காட்டியிருந்தார். மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் ஜிண்டாலுக்கு முக்கியத் தொடர்பு உள்ளது என்று கசாப் கூறினார். கசாப் தூக்கில் இடப்பட்ட பின்னர், அவன் அடைக்கப்பட்ட தனிச் சிறையில், பின்னர் ஜிண்டால் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த சிறையில் கசாப் கனவில் வந்து தன்னை பயமுறுத்துவதாகவும், எனவே தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும்  என்றும் ஜிண்டால் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த கோரிக்கையை ஏற்று நீதிபதி அவரை வேறு சிறைக்கு  மாற்ற உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to கனவில் பயமுறுத்துகிறார் அஜ்மல் கசாப்: தீவிரவாதி ஜிண்டாலுக்கு சிறை மாற்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com