இந்தியக் குடியரசு தலைவர் பிரணா முகர்ஜி மேலும் 5 பேரின் கருணை மனுக்களை நேற்று நிராகரித்துள்ளார்.
இந்த மனுக்கள் நீண்டகாலமாக பரிசீலனையில் இருந்தது. அந்த 5 பேரின் கருணை மனுக்களையும் அவர் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று நேற்று நிராகரித்தார்.
எனினும் மேலும் இருவருக்கு தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் ஜனாதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது குடியரசு தலைவர் அலுவலகத்திடம் எந்தவொரு கருணை மனுவும் நிலுவையில் இல்லை. ஒட்டுமொத்தமாக 5 பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 5 பேரின் தூக்கிலிடப்படும் தேதியை அந்தந்த மாநில நீதிமன்றங்கள் விரிஅவில் முடிவு செய்ததும் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளன. கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் குடும்பத்தினர் கடும் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே, 1993ம் ஆண்டு 22 போலீஸார் கொல்லப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலலேந்திரன் ஆகியோரது கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது.
எனினும் இவர்களது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் இன்னமும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
கடந்த நவம்பர் மாதம் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பின் கருணை மனுவை பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். அடுத்து 3 மாதத்தில் நாடாளுமன்ற தாக்குதல் சந்தேக நபர் அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரித்தார். இதையடுத்து இருவரும் தூக்கிலிடப்பட்டிருந்தனர்.
தற்போது தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்ட 5 பேர்களில் பலர் தங்களது சொந்த குடும்ப உறுப்பினர்களையே படுகொலை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மேலும் 5 பேரின் கருணை மனுக்களை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் - விரைவில் தூக்கு