Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


நடிகை குஷ்புவுக்கு திமுகவில் மிகப் பெரிய நெருக்கடி உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக திமுகவிலிருந்து வெளியேறி காங்கிரஸில் இணையலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சங்கம் நடத்தி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட குஷ்பு கலந்து கொள்ளவில்லையாம். சினிமாக்காரர்களின் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தவறாமல் போய் வரும் அவருக்கு திமுகவில் நெருக்கடி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தனக்கு திமுகவுக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து கருணாநிதியிடம் வெளியிட்டும் கூட குஷ்புவுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் பெரும் வேதனையுடன் இருக்கிறாராம்.

இனிமேலும் திமுகவில் நீடிப்பது சாத்தியப்படாது இருக்காது என்பதால் அவரது பார்வை தற்போது காங்கிரஸ் மீது விழுந்துள்ளதாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to குஷ்புக்கு திமுகவில் பாரிய நெருக்கடி: கருணாநிதியிடம் குமுறல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com