Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தென்னிந்திய திரைப்படப் பாடகர் மாணிக்க விநாயகம் வீட்டை பெரியார் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடக்கும் விழாக்களுக்கு தமிழகத்திலிருந்து யாரும் போகக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக திரையுலகினர் யாரும் இலங்கைக்குப் போகக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி என அனைத்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே இலங்கை சென்று வந்த அசின், பாடகர் கிரீஷ், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி போன்றோருக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

இப்போது இலங்கையில் உள்ள கோயில் ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியில், தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் பங்கேற்றுப் பாடினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திராவிடர் கழகத்தினர் அவரது இன்று சென்னையில் உள்ள அவர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to இலங்கைக்கு விஜயம் செய்த பாடகர் மாணிக்க விநாயகத்தின் வீடு முற்றுகை! (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com