இன்று பாகிஸ்தான் லாகூர் செல்ல உள்ள சரப்ஜித் சிங் குடும்பத்தினர், அதற்கு முன்னதாக அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு சென்று, சரப்ஜித் சிங் நலம் பெற பிரார்த்தனை செய்தனர். பின்னர் அவர்கள் பாகிஸ்தான் லாகூருக்கு புறப்பட்டனர்.
லாகூர் சிறையில் உள்ள சரப்ஜித் சிங், சக கைதிகளால் பலமாகத் தாக்கப்பட்டு, கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம்தான் பொருத்தப்பட்டு உள்ளது என்றும் லாகூர் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கைதானவர் பஞ்சாபை சேர்ந்த சரப்ஜித் சிங். பாக்கிஸ்தான் நீத்மன்றம் இவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது. இந்நிலையில்தான் லாகூர் சிறையில் உள்ள சரப்ஜித் சிங், சக கைதிகளால் சரமாரியாகத் தாக்கப்பட்டு தற்போது உயிருக்கு போராடிக்கொண்டு உள்ளார்.
சரப்ஜித் சிங் விஷயத்தில் மத்திய அரசு மிக அலட்சியமாக நடந்துகொண்டு வருகிறது என்றும் பஞ்சாப் துணை முதல்வர் மத்திய அரசின் மீது குறை கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள மாஸ்கோவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், "மத்திய அரசு சரப்ஜித் விவகாரத்தில் அலட்சியம் காண்பிக்கவில்லை. தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வருகிறது. அவரை மருத்துவ காரணங்கள் காண்பித்து இந்தியா கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளுக்கான பேச்சுவார்த்திகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது." என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் 15 நாள் விசாவில் பாக்கிஸ்தான் பயணம் செய்ய உள்ள சரப்ஜித் சிங் குடுமப்த்தினர், சரப்ஜித் சிங் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து, இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர் நலம் பெறுவார் என்று தாங்கள் நம்பியே பொற்கோயிலுக்கு பிரார்த்திக்க வந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பாஜகவும் சரப்ஜித் சிங்கை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சரப்ஜித் சிங் மீதான தாக்குதலை பாகிஸ்தான் தலிபான்கள் அல்லது லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் மேற்கொண்டிருக்கலாம் என இந்திய புலனாய்வு துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சிறைச்சாலையில் சரப்ஜித் சிங் மீது தாக்குதல் மேற்கொண்ட சக கைதிகள் முன்னர் பாகிஸ்தான் தலிபான் அமைப்பிலும், லஷ்கர் இ தொய்பா அமைப்பிலிம் இருந்தவர்கள் எனவும்,
அண்மையில் இந்தியாவில் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக சரப்ஜித் சிங் மீது இத்தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தலையை செங்கல்லில் மோதியும், நெய் டின்னுக்கு பயன்படுத்தப்படும் முட்கரண்டி, கத்தி என்பவற்றை கொண்டு முகத்தில் கீறியும் சரப்ஜித் சிங் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை சரப்ஜித் சிங்கை மருத்துவமனையில் நேரடியாக ஒரு முறை மட்டும் சந்திப்பதற்கு இந்திய மத்திய அரசின் இரு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்தான் சரப்ஜித் சிங் எப்படி இருக்கிறார் என்கிற முதல் கட்டத் தகவலை இந்தியாவுக்கு தெரிவிப்பதற்காக லாகூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தூதரக அதிகாரிகள் இருவரை, மருத்துவமனை நிர்வாகம் மற்றும், பாக் காவல்துறை சரப்ஜித் சிங்கை காண அனுமதி மறுத்துள்ளது. சரப்ஜித் சிங் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த பாக் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அப்போது சிறை காவல் போருப்பிழ்க் இருந்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில் சரப்ஜித் குடும்பத்தினர் தற்போது மருத்துவமனைக்குள் உள்ளனர். எனினும் சரப்ஜித் சிங் எப்படி இருக்கிறார் எனும் தகவலை தெரிவிக்க அவர்கள் மூவரும் மருத்துவமனை வளாகத்தை விட்டு இன்னமும் வெளியில் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
சரப்ஜித் சிங்கிற்காக இந்திய மக்கள் அனைவரும் பிரார்த்திக்கும் படியும், அவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் முன்னர் சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் சரப்ஜித் சிங் தொடர்ந்து கோமா நிலையிலேயே இருப்பதாகவும் அவர் உயிர் பிழைப்பதற்காக வாய்ப்புக்கள் மிக அரிதாகிக்கொண்டு செல்வதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Responses to சரப்ஜித் சிங்கை பார்க்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு?