இன்று பிற்பகல் சுமார் 1 மணி அளவில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்து சுமார்
அரை மணிநேரம் பேசினார்.
எதிர்கட்சித் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய, திருமாவளவன், பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேமுதிக கட்சித் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்தை சந்தித்து, மரக்காணம் ஜாதி கலவரம் தொடர்பாக சுமார் அரை மணி நேரம் பேசினோம்.
தமிழகத்தில் அரசியல் லாபத்துக்காக ஜாதிக் கலவரத்தைத் தூண்டுபவர்களுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவே விஜயகாந்த் அவர்களை சந்தித்து பேசினேன். அவர் தம்மால் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும், தமது கட்சியின் சார்பாக உறுப்பினர்களை அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதே போன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி இவர்களையும் சந்தித்து எங்களது போராட்டத்துக்கு அதரவு கேட்க உள்ளோம்." என்று திருமாவளவன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to விஜயகாந்த் - திருமாவளவன் திடீர் சந்திப்பு