Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

26.04.2013 வெள்ளிக்கிழமை அன்று தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி காலத்தின் தேவை கருதி தமிழினவழிப்பிற்கு நீதி கேட்டும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் ஒர் கவனயீர்ப்பு போராட்டத்தை பிரான்ங்போர்ட் தொடரூந்து நிலையத்திலிருந்து (Frankfurt am Main) இந்திய தூதரகம் வரை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கொட்டும் மழையையும் குளிரையும்  பொறுப்பெடுக்காமல் பல தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டார்கள். தமிழீழ தேசியக் கொடியை தாங்கியூம், சிறீலங்கா தமிழினவழிப்பை நிறுத்து பாலியல் துன்புறுத்தல்களை நிறுத்து போன்ற சொற்பதாதைகளை தாங்கியும் கொட்டொலிகளை எழுப்பியவாறு வீதியூடாக கவனயீர்ப்பு போராட்டம் பிரான்ங்போர்ட் தொடரூந்து நிலையத்திலிருந்து இந்திய தூதரகத்தை நோக்கி நகர்ந்து சென்றது.

இவ் எழுச்சி நிகழ்வில் குறிப்பாக இளையோர்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். கவனயீர்ப்பு போராட்டம் இந்திய தூதரகத்தை சென்றடைந்ததும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிர் தந்த மாவீரர்களுக்கு அகவணக்கம் நிகழ்த்தப்பட்டது. அகவணக்கத்தை தொடர்ந்து மக்களால் தமிழீழ தேசியக் கொடியை அசைத்தவாறு தொடர்ச்சியாக கொட்டொலிகள் எழுப்பப்பட்டது.

தமிழ் இளையோர் அமைப்பினரால் இந்திய தூதரத்திற்கு மனுவொன்றும் கையளிக்கப்பட்டது. இப்போராட்டமானது வேற்றின மக்களை ஈர்க்கும் வகையில் நடைபெற்றது, வாகனத்தில் சென்ற வேற்றின  மக்கல் தமது வாகனத்தின் சாலரத்தை திறந்து தமிழர்களின் கோரிக்கையை அறிந்து கொண்டார்கள்.

இறுதியில் தமிழர்களின் தாரக மந்திரத்தை கூறி எழுச்சிபூர்வமாக போராட்டம் நிறைவடைந்தது.

0 Responses to காலத்தின் தேவை கருதி பிரான்ங்போர்ட் நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com