Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் ஒருவர் உருவாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அச்செய்தியினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரகசியமான முறையில் அந்நபர் புலிகளுக்கு தலைமை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.புலனாய்வுப்பிரிவினரும் சர்வதேச பொலிஸாரும் இணைந்து குறித்த நபரை கைது செய்ய முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் குறித்த நபர் தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. குமரன் பத்மநாதனின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவராக குறித்த நபர் கருதப்படுகின்றார்.சீலன் என்ற பெயருடைய குறித்த நபர் பத்து கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் சர்வதேச ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் புலனாய்வு நடவடிக்கைள் போன்றவற்றுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.வன்னி யுத்தத்தின் பின்னர் நெடியவன் புலிகளுக்கு தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இரகசியமான கட்டளைகளை அனைத்தும் இந்த சீலன் என்பவரே பிறப்பித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே அரச புலனாய்வுப்பிரிவே இவ்வாறான தகவல்களை சிங்கள பத்திரிகைகளினூடாக கசியவிட்டு நோட்டம் பார்ப்பதாக கருதப்படுகின்றது.

தமக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயலும் அணைத்துலகத்தை திசைதிருப்புவதற்காக சிங்கள அரசினால் புணையப்படும் கற்பனைக்கதை இதுவென்பது அணைத்துலகத்திற்கு நன்றாகவே தெரியும். 

இருக்கின்ற தலைவனை இல்லையென்கிறான், இல்லாத கடவுளை இருக்கு என்கின்றான்.

0 Responses to சர்வதேசத்தை ஏமாற்ற இலங்கை பகீரத முயற்சி! விடுதலைப்புலிகளுக்கு இந்தோனேசியாவினில் புதிய தலைவராம்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com