Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


ஹரியானாவில் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராறில் தந்தை உட்பட 8 பேரை கொலை செய்த வழக்கில் சோனியா என்கிற
பெண்ணுக்கு, தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சோனியாவின் கருணை மனுவை நிராகரித்தார். இதன் மூலம் நாட்டிலேயே முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு தூக்கு தணடனை என்கிற நிலை உருவாகியுள்ளது.

ஹரியானாவின் முன்னாள் எம் எல் ஏ வின் மகள் சோனியா. இவர் தனது கணவருடன் சேர்ந்து குடும்பத்தில் ஏற்பட்ட சொத்துத் தகராறில்  2001ம் அண்டு தந்தை உட்பட 8 பேரை கொலை செய்துள்ளார். இதன் பிறகு கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டு, அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் இருவருக்கும் தூக்குதண்டனை உறுதியானது.

இந்நிலையில் குடியரசுத் தலைவருக்கு சோனியா தண்டனை குறைப்பு கேட்டு கருணை மனு அனுப்பி இருந்தார். மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதன் மூலம் சோனியாவுக்கும், அவரது கணவருக்கும் தூக்கு தண்டனை உறுதியாகி உள்ளது. இவர்களோடு சேர்த்து மேலும் 6 குற்றவாளிகளின் கருணை மனுவை குடியரசுத்  தலைவர் நிராகரித்து இருப்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to முதன் முறையாக ஒரு பெண்ணுக்கு தூக்கு தண்டனை : கருணை மனுவை நிராகரித்த பிரணாப்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com