Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


ஐ.நாவின் அமைதி காக்கும் படையிலிருந்து தெற்கு சூடானில் பணியாற்றிக்கொண்டிருந்த ஐந்து இந்திய வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தென் சூடானின் கிழக்கே ஜோங்லாய் மாகாணத்தில் மறைந்திருந்த ஆயுதக்குழு ஒன்று, அங்கு வந்து கொண்டிருந்த ஐ.நா அமைதிப் படையினரின் இராணுவ அணிவகுப்பு மீது இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதலில் இரண்டு அதிகாரிகள் மற்றும் மூன்று சிப்பாய்கள் பலியாகியுள்ளனர்.

ஐ.நாவின் அமைதிகாக்கும் படையில் இருந்த இந்திய வீரர் ஒருவர் கடந்த மாதம் இதே பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு தெற்கு சூடான் தனி நாடாக விடுதலையான பிறகு ஜோங்லாய் பகுதியில் பரந்து பட்ட அளவில் இன மோதல்கள்நடைபெற்று வருகின்றன. அங்குள்ள பிபோர் மாவட்டத்தில் முர்லே மற்றும் லூ நூர் பூர்வக்குடி மக்களிடையே இம்மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

அதனை கட்டுப்படுத்துவதற்காகவே ஐ.நா அமைதிப்படையினர் அங்கு நிலைகொண்டிருந்தனர். மரணமடைந்த ஐந்து வீரர்களின் உடலங்களை நாட்டுக்கு கோண்டுவர நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஐ.நாவின் அமைதிகாக்கும் படையிலிருந்த ஐந்து இந்திய வீரர்கள் தென் சூடானில் படுகொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com