Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் மாணவர்கள் சத்தியகுமரன், வெட்டுபெருமாள் உள்ளிட்ட 11 மாணவர்கள் 03.04.2013 புதன்கிழமை காலை திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஐ.ஜி.அலுவலகம் எதிரே உள்ள தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது தனித்தமிழ் ஈழம் அமைவதற்கு எதிராக பேசி வரும் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித்தை கண்டித்தும், மாணவர்களை தாக்கிய காங்கிரசாரை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து மத்திய மந்திரி சல்மான்குர்ஷித்தின் உருவ படத்தை தீயிட்டு கொளுத்தினார்கள். இதையடுத்து அங்கு போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், இன்ஸ்பெக்டர்கள் உமாசங்கர், குணசேகரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி கண்டோன்மெண்ட்டில் உள்ள இலங்கை நாட்டுக்கு சொந்தமான மிகின்லங்கா விமான டிக்கெட் முன்பதிவு அலுவலகத்துக்கு சென்றனர். 

அங்கு இலங்கை அரசை கண்டித்து கோஷமிட்டபடி திடீரென்று அலுவலகத்துக்கு உள்ளே புகுந்து தரையில் அமர்ந்தனர். இந்த அலுவலகத்தை இழுத்து மூட வேண்டும். அதுவரை ஓயமாட்டோம் என்று கோஷமிட்டனர். 

அப்போது அங்கு பணியில் இருந்த ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்கள். இதையடுத்து போராட்டம் நடத்திய மாணவர்களுடன் செசன்சு கோர்ட் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, அங்கு அமர்ந்து இருந்த மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் வேனில் ஏற்றினார்கள். இதில் மொத்தம் 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 


0 Responses to இலங்கை விமான அலுவலகத்துக்குள் புகுந்து மாணவர்கள் போராட்டம்! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com