தனி தமிழ் ஈழம் வேண்டும். அதற்கு உலக அளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஈழத் தமிழ்ர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்றற கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர். செவ்வாய் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட மாணவர்கள் இந்திய அரசே.. மரணம் தான் முடிவா தமிழினத்திற்கு.. வாக்காளர் அடையாள அட்டை இனி எதற்கு என்ற பதாகை ஏந்தி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்கச் சென்று தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை அங்கிருந்த அலுவலரிடம் கொடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் மீண்டும் அடுத்த வடிவம் பெரும். துனித் தமிழ் ஈழம் பெரும் வரை மாணவர்கள் போராட்டம் ஓயாது என்றனர் போராட்ட மாணவர்கள்.




0 Responses to தமிழினத்திற்கு மரணம் தான் முடிவா? வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பிக் கொடுத்த மாணவர்கள் (படங்கள் இணைப்பு)