Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கை தமிழர்களுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், தலைவர் சோனியா காந்தியும் நேசக்கரம் நீட்டி வருகிறார்கள்.

மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு செய்துள்ள திட்டங்களைமக்களிடம் காங்கிரசார் எடுத்து சொல்ல வேண்டும் என்று தமிழகாங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. பேசினார்.

மதுரையில் நடைபெற்ற மதுரை பாராளுமன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசியதாவது:-

 இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ளது.

தற்போது இலங்கை தமிழர்களுக்காக, இந்தியா 4 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இதன் மூலம் இலங்கை தமிழர் பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. ஆனாலும் 13 நாடுகள் ஆதரிக்கவில்லை.
அமெரிக்க தீர்மானத்தில் சில திருத்தங்களை செய்ய இந்தியா விரும்பியது. ஆனால் அப்படி திருத்தங்களை செய்தால் மற்ற நாடுகள் ஆதரிக்காது. தீர்மானம் தோற்று போய் விடும் என்ற நிலை ஏற்பாட்டில் கடைசியில் தீர்மானம் நிறைவேற இந்தியா ஆதரித்தது.

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படி செய்தால் பாதிக்கப்படுவது தமிழர்கள் தான். தற்போது மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி வழங்கி வருகிறது. பொருளாதார தடை விதித்தால் அந்த நிதியை வழங்க முடியாத நிலை ஏற்படும். ஆனால் சிங்களவர்களுக்கு மற்ற நாடுகள் உதவி செய்துவிடும்.

பொது வாக்கெடுப்பு என்கிறார்கள். இதனை மத்திய அரசோ, மன்மோகன் சிங்கோ செய்ய முடியாது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தான் பொது வாக்கெடுப்பு நடத்த முடியும். அப்படி செய்யும்போது அதனை இந்தியா ஆதரித்தாலும், இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யாவும், சீனாவும் பொது வாக்கெடுப்பு தீர்மானத்தை தோற்கடித்து விடும்.

இலங்கை தமிழர்களுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும், தலைவர் சோனியா காந்தியும் நேசக்கரம் நீட்டி வருகிறார்கள். மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு செய்துள்ள திட்டங்களை மக்களிடம் காங்கிரசார் எடுத்து சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

0 Responses to இலங்கை தமிழர்களுக்கு சோனியா காந்தி நேசக்கரம் நீட்டி வருகிறார்: ஞானதேசிகன் எம்.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com