Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


மாவோயிஸ்டுக்களால் கடத்தப்பட்ட சட்டிஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நாந்த் குமார் படேல் மற்றும் அவருடைய மகன் தினேஷ் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பஸ்டாரின் ஜிராம் பள்ளத்தாக்கில் மேலும் எட்டு சடலங்களுடம் இவர்களுடன் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று காங்கிரஸ் பேரணியில் மாவோயிஸ்டுக்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் 32 பேர் இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலனவர்கள் பாதுகாப்பு  தரப்பினர். தாக்குதல் நடந்த போது கடும் மழை பெய்து கொண்டிருந்ததால் இழப்பு அதிகரித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் மூத்த காங்கிரஸ் தலைவர் மஹேந்திரா கர்மாவும் அடங்குவார். முன்னாள் உள்துறை அமைச்சர் வி.எஸ்.சுக்லா படுகாயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இவ்வாறான தாக்குதல்களால் காங்கிரஸை வீழ்த்த முடியாது. நாம் தொடர்ந்து முன்னேறிச்செல்வோம். இது காங்கிரஸ் மீதான தாக்குதல் அல்ல. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஆனால் இதைகண்டு பயப்பட மாட்டோம் என்றார்.

 மேலும் காயமடைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் வி.எஸ்.சுக்லா மற்றும் ஏனையோரை மருத்துவமனையில் சென்று பார்வையிட்டார். இதேவேளை பிரதமர் மன்மோகன் இங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் விரைவில் சட்டிஸ்கர் மாநிலத்திற்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.

0 Responses to கடத்தப்பட்ட காங்கிரஸ் தலைவரும் மகனும் படுகொலை : சட்டிஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதலில் பலி 27

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com