Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழின அழிப்பைபெரும் வெற்றி விழாவாக சிங்களப் பேரினவாதம் கொண்டாடிய நிலையில், சிறீலங்காப் பேரினவாதத்தின் தமிழின அழிப்பின் நினைவு நாளான நேற்று 18ம் திகதி சனிக்கிழமை பிரான்சில் மேலும் ஒரு நினைவு தூபி திறந்துவைக்கப்பட்டது.

ஏற்கனவே இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களின் நினைவாக செவ்ரோன் நகரபிதாவின் ஆதரவுடன் செவ்ரோன் மாநகரப் பூங்காவில் நினைவு கல் ஒன்று வைக்கப்பட்டுள்ளதுடன், சிறீலங்கா வான் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு லாக்கூர்நெவ் நகரசபை நினைவுச்சிலை அமைத்துள்ள நிலையில், தற்போது 3வதாக கிளிச்சி நகரசபையின் ஆதரவுடன் பிரமாண்டமான நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மூதூரில் பணியாற்றிய பிரான்சின் பட்டினிக்கு எதிரான அமைப்பின் (Action Contre la Faim) 17 உறுப்பினர்கள் சிறீலங்காப் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டதன் நினைவாக இந்தத் தூபி அமைக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த நினைவு தூபியில் இனப்படுகொலைக்கு உள்ளான ஏனைய தமிழ் மக்களுக்கும், விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்குமான நினைவு தூபியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு தூபியைச் சுற்றி தமிழர்களின் தேசியச் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கிளிச்சி லா கார்ன் நகரபிதா அவர்களால் இந்த நினைவு தூபி திறந்து
வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், தமிழ் அமைப்புக்களும் பொது மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.



























0 Responses to முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவு நாளில் பிரான்சில் 3வது நினைவு தூபி திறப்பு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com