இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரவலத்தினில்
ஆகுதியான அனைவருக்குமான 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம்
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்
ஏற்பாட்டினில் இடம்பெற்றிருந்தது.
யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு நகரிலுள்ள தமிழரசுக்கட்சி வளவினுள் இன்று மாலை நடைபெற்றிருந்தது.நூற்றுக்கும் அதிகமான மக்கள் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர்கள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென பொமனவானோர் பங்கெடுத்திருந்தனர். பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையினில் இவ்வஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான நினைவேந்தல் கூட்டம் கூட்டமைப்பு காரியாலயமான அறிவகத்தினில் இடம்பெற்றது.கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர் சிறீதரன் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென பெருமளவிலானோர் பங்கெடுத்திருந்தனர்.பலத்த நெருக்குவாரங்கள் மத்தியினிலும் பெமளவிலானோர் பங்கெடுத்திருந்தனர்.
வவுனியாவிற்கான நினைவேந்தல் கூட்டம்; இன்று காலை வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியிருந்தது.
இந்நிகழ்வில் உயிர் நீத்த மக்களுக்கான நினைவுச்சுடர் ஏற்றலையும்; மலர் அஞ்சலியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிச முன்னணியின் தலைவர் சிறிதுங்க வீரசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவன், வினோ ரோதநாதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா மற்றும் மதத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், போரினால் தாய் தந்தையர் இழந்த பிள்ளைகள்,; பெற்றோர்கள், சமுக ஆர்வலர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் நெஞ்சுருக ஏற்றி அஞ்சலி செய்திருந்தனர்.

0 Responses to வடக்கெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!