ஐபிஎல் கிரிக்கெட் கோலாகல விழா ஓய்ந்தாலும், ஐபிஎல் தொடர்பான சூதாட்ட புகார்கள் குறித்த அலைகள் ஓயாது போலும்!
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் மேலும் ஒரு ஐபிஎல் அணியை சேர்ந்த 3 வீரர்களுக்கு தொடர்பு உள்ளது என்று, விசாரணையில் டெல்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பல தரகர்கள் கைது செய்யப்பட்டு வந்து கொண்டுள்ளனர். முதலில் இந்த மோசடி புகாரை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த டெல்லி போலீசார், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள், மற்றும் 19 தரகர்களைக் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இவர்களில் முஹம்மது யாஹியா என்கிற தரகரிடம் நடத்திய விசாரணையின் போது, மற்றொரு ஐபிஎல் அணியை சேர்ந்த 3 கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்ட தகவல் தெரிய வந்தது. அது குறித்து அந்த வீரர்களுடன் தொடர்பு கொண்ட சில தரகர்களின் பெயர்களையும் யஹியா விசாரணையின் போது கூறி இருக்கிறார்.
டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மேற்கண்ட இந்த தகவலை உறுதி செய்துள்ளார். குறிப்பிட்ட 3 வீரர்களை கைது செய்வதற்கு முன்பு அவர்களைத் தொடர்பு கொண்ட நேரடி சாட்சிகளான தரகர்களை முதலில் கைது செய்த பின்னர்தான், வீரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உயர் அதிகாரி தெரிவிக்கும் தகவலாக உள்ளது.
மேலும் அவர் அளித்துள்ள தகவாலானது, அவர்கள் மூன்று பேரும் மிகவும் பிரபலமானவர்கள் அல்ல என்றும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் அல்ல என்றும் குளூ கொடுத்துள்ளார்.
0 Responses to ஐபிஎல் கிரிகெட் சூதாட்ட புகார்: மேலும் ஒரு ஐபிஎல் அணியின் 3 வீரர்களுக்கு தொடர்பு?