இரு பாகிஸ்தானிய லெஸ்பியன் பெண்கள் திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் தற்போது லண்டனில் அகதிகள் தஞ்சம் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த ஜோடியினரின் உறவினர் லண்டனிலிருந்து தெரிவிக்கையில் பாகிஸ்தானில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை என்பதனால் இக்கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த குறித்த இரு பெண்களும் மூன்று வருடங்களுக்கு முன்னர் சந்தித்து பழகியுள்ளனர். லண்டனின் தென் யோக்க்ஷீரில் ஒருவருடம் ஒன்றாகவும் இணைந்து வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையிலே அவர்களுக்கு பாகிஸ்தான் திரும்ப முடியாத நிலை தோன்றியுள்ளது. குறித்த பெணண்களில் ஒருவரான கௌசார் கருத்து தெரிவிக்கையில், இங்கிலாந்து எமது உரிமைகளை மதிக்கிறது. எமது தனிப்பட்ட விருப்பத்தை அனுமதிக்கிறது. யாராலும் இதில் தலையிடமுடியாது என கூறியுள்ளார்.
பாகிஸ்தானை பொருத்தவரை எப்போதும் இன்னொருவரே எமது வாழ்க்கையை தீர்மானிப்பவராக இருக்கிறார். இது சரியான அணுகுமுறை அல்ல. எமது மதத்தலைவர்கள் எமது சமூகத்தை கட்டுப்படுத்துகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த இரு பெண்களும் லண்டனில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த போது திருமணத்தை நடத்திவைக்க மதத்தலைவர்கள் எவரும் முன்வராததால் இருவரும் பதிவுத்திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்தில் அகதிகள் தஞ்சம் கோரியுள்ளனர்.

0 Responses to இரு பாகிஸ்தானிய பெண்கள் திருமணம் செய்து கொண்டதால் கொலை மிரட்டல் : லண்டனில் அகதிகள் தஞ்சம்